Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / adaṭṭi uruṭṭi vazhi koṇarndāḷ

Index of Compositions

adaṭṭi uruṭṭi vazhi koṇarndāḷ

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Aṭhāṇā Ādi

P

adaṭṭi uruṭṭi vazhi koṇarndāl enṛeṇṇi 

ānandappaṭṭāḷ yashōdai - ānālum avaḷ oru pēdai 

aṇḍa bahiraṇḍa muhaḍu muṭṭi - appālumaḷanda piṛānai - op

pānavar engumilānai - parāparanai - nirāmayanai - dāmōdaranai...

AP

edukkēdō sholli - mukhastuti pāḍum - 

ēla malar kuzhali - mānē 

ivanaiyum aḍakka - nānoru piḷḷai 

ēngittavamirundu - peṭrēnē 

idam paḍuvadāhina mozhiyō - inam kamazhvadāhina uraiyō 

padam peruvadāhina muṛaiyō - palikkumunam - kaḷikka varum mukhattivanai...

C1

enakkanrō teriyum! teriyumēḍi!

unakku teriyumōḍi ivan perumāyan ena

MK

ēzhai shol ellām ambalam ērādu - enrenekku teriyum

onṛu pōla pala jōtiḍarānavar - peṇ piṛakkum enṛu shonnadum attanai 

jōtiḍaraiyum poiyākki vaittum ivan - āṇāhappiṛandadum 

enakkanṛō teriyum! teriyumēḍi! tānāha shiṛandadum

1.

enṛu anda peṇ uruvāhina pootanai tanaiyoru vādanaiyāhiḍa

izhuttu uṛinji uyiruḍan nanjinai - azhittu ninṛananō anṛē   (enakkanṛō)

2.

marattaḍiyil māḷavi - kuḷattaḍiyil gurjari - nadikkarayil āhiri

kiṇattaḍiyil dhēnuka - madukkaraiyil mōhanam 

manaikkediril ārabhi - naḍutteruvil sāvēri ena 

sāḷiyōḍu - muraḷi gānam - uruhumāru peruha pāḍi

taruṇiyaradu - manamayanga - tāṇḍavamiḍum ivanai uḷḷapaḍiyārenṛu (enakkanṛō) 

ēzhai shol ellām ēṛādenṛō kaṇakku 

ettanai nāḷaḍi irukkumō vazhakku

mōzhai moottadenṛa ānṛorhaḷ karuttu 

muṭṛilum sariyācchē mukunda murahari tahundadoru kiṛukku (adaṭṭi uruṭṭi)

Meaning 

Yasodha was happy, or atleast she thought she was, for having brought Krshna around to her ways by threatening him. Yet she is a simpleton indeed, to have thought that she could do that to the one who measured the universe, the one who is beyond comparison and to the one who  controls the whole universe!

Empty words to vainly praise someone will not work. That I stood in penance to get a son like this! The pretty face ensured that I could never enforce any of his promises to behave, to be a good child and to soften up.

Only I know that he is a magician but who listens to this poor lady?! Many astrologers did

predict that I would beget a girl but again only I know that he made a mockery of all such

predictions. The day he sucked all the poison out of that demon Pootanai, I knew that ….

Malavi under a tree, Gurjari near a pond, Ahiri on the banks of a river, Dhenuka near a well, Mohanam near a pool, Arabhi before a house, Saveri in the street … he produces heart-melting music… Who can understand the one whose dance enchants the whole world? But again, nobody would believe this poor woman! How long will this logic and argument - that Mukundan is unbalanced - last? After all, wise men had opined that the eldest is always a dullard.

அடாணா ஆதி

அதட்டி உருட்டி வழி கொணர்ந்தாள் என்றெண்ணி 

ஆனந்தப்பட்டாள் யசோதை - ஆனாலும் அவளொரு பேதை 

அண்ட பகிரண்ட முகடுமுட்டி - அப்பாலுமளந்த பிரானை - ஒப்

பானவர் எங்குமிலானை - பராபரனை - நிறாமயனை - தாமோதரனை…

அப

எதுக்கேதோ சொல்லி - முகஸ்துதி பாடும் - 

ஏல மலர்க்குழலி - மானே 

இவனையும் அடக்க - நானொரு பிள்ளை 

ஏங்கித் தவமிருந்து - பெற்றேனே 

இதம் படுவதாகின மொழியோ - இனம் கமழ்வதாகின உரையோ 

பதம் பெருவதாகின முறையோ - பலிக்குமுனம் - களிக்க வரும் முகத்திவனை …

ச1

எனக்கன்றோ தெரியும்! தெரியுமேடி! 

உனக்கு தெரியுமோடி இவன் பெருமாயன் என

மக  

ஏழை சொல் எல்லாம் அம்பலம் ஏறாது - என்றெனக்குத் தெரியும் 

ஒன்று போல பல ஜோதிடரானவர் - பெண் பிறக்கும் என்று சொன்னதும் அத்தனை ஜோதிடரையும் பொய்யாக்கி வைத்துமிவன் - ஆணாகப் பிறந்ததும் எனக்கன்றோ தெரியும்! தெரியுமேடி! தானாகச்  சிறந்ததும் 

1.

என்று அந்த பெண் உருவாகின பூதனை தனையொரு வாதனையாகிட

இழுத்து உறிஞ்சி உயிருடன் நஞ்சினை - அழித்து நின்றனனோ அன்றே  (எ)

2.

மரத்தடியில் மாளவி - குளத்தடியில் குர்ஜரி - நதிக்கரையில் ஆஹிரி      

கிணத்தடியில் தேனுகா - மடுக்கரையில் மோஹனம் 

மனைக்கெதிரில் ஆரபி - நடுத்தெருவில் சாவேரி என 

ஸாளியோடு - முரளி கானம் - உருகுமாரு பெருகபாடி 

தருணியரது - மனமயங்க - தாண்டவமிடும் இவனை உள்ளபடியாரென்று (எ)

ஏழை சொல் எல்லாம் ஏறாதென்றோ கணக்கு 

எத்தனை நாளடி இருக்குமோ வழக்கு 

மோழை மூத்ததென்ற ஆன்றோர்கள் கருத்து 

முற்றிலும் சரியாச்சே முகுந்த முரஹரி தகுந்ததொரு கிறுக்கு (அதட்டி  உருட்டி)