Download Venkata Kavi app
Mandolin U Shrinivas
Kānaḍā | Ādi |
P | alaipāyudē kaṇṇā en manam miha alaipāyudē un ānanda mōhana vēṇugānamadil |
AP | nilai peyarādu shilai pōlavē ninṛa |
MK | nēramāvadaṛiyāmalē miha vinōdamāna muraḷeedharā en manam |
C | teḷinda nilavu paṭṭapahalpōl eriyudē dikkai nōkki enniru puruvam neriyudē kaninda un vēṇugānam kāṭṛil varuhudē kaṇgaḷ shoruhi oru vidamāi varuhudē |
MK | kaditta manattil uṛuti padattai enakku aḷittu mahizhta vā – oru tanitta vanattil aṇaittu enakku uṇarchi koḍuttu muhizhta vā kanaikaḍal alaiyinil kadiravan oḷiyena iṇaiyiru kazhal enakkaḷitta vā kadaṛi manam uruha nān azhaikkavō idara mādaruḍan nee kaḷikkavō idu tahumō idu muṛaiyō idu dharmamtānō – kuzhal oodiḍum pozhudu āḍiḍum kuzhaihaḷ pōlavē manadu vēdanaimihavoḍu |
Meaning
My heart is restless Kanna, on listening to the enchanting music emanating from your flute.
I stand transfixed listening to the divine music and do not realize even the passage of time.
The full moon is burning me up as though it is the mid-day sun. I search for you and look towards where you are. The music from your flute comes wafting with the breeze. And I go into a trance.
Please come here and delight me by giving me a place in your heart. Come alone into a forest to embrace me and give me fulfillment.
You had decked me with a pair of bangles which shone like sunlight glistening on the dark waves of the sea (as a promise to marry me)
Do you want me to cry my heart out even as you dally with other women? Is this fair? My heart trembles (in pain) like the ear-rings which dangle when you play the flute.
கானடா | ஆதி |
ப | அலைபாயுதே கண்ணா ! என் மனம் மிக அலைபாயுதே உன் ஆனந்த மோஹன வேணு கானமதில் |
அப | நிலைபெயராது சிலை போலவே நின்ற நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா என் மனம் |
ச | தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே திக்கை நோக்கி என்னிரு புருவம் நெரியுதே கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே |
மகா | கதித்த மனத்தில் உறுத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்த வா - ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்த வா கனைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலெனக்களித்த வா கதறிமனமுருக நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ இது தகுமோ ‐ இது முறையோ‐ இது தருமம் தானோ - குழ- லூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே மனது வேதனை மிகவொடு |