Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / darishanam tandē aruḷinān

Index of Compositions

darishanam tandē aruḷinān

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Ārabhi Ādi

P

darishanam tandē aruḷinān

MK

tāmē nikhilamena tāmōdiyapaḍi tāmōna aruḷai dāmōdarahari

tāmārena varum nārada māmuni tāmuyyavenṛu tāmmeiya ninṛu

AP

parijanamuḷḷa padinārāyiram ennum 

pattinihaḷ māmanaiyē

paramāna vaikuṇṭham ākkittanittaniyāi

pahirndu irundu mādhavan tanaiyē 

C1

toṇḍarkula aravinda malaraḍiyai tozhudu

koṇḍu tuyil ezhundaruḷa pāḍa

tumburu matanga shuka shownaka munivarum

shruti izhaittaruḷ bhoopāḷam pāḍa 

paṇḍanaiya vēdam pāḍum maṛaiyavarhaḷ pangu

pōṭṭamaḷi aruhinil kooḍa – adai

pārtta nāradarum shruti shērtta tandiyilē

pāṭṭonṛu pāḍa sēvittu ōḍa 

C2

aḍutta manaiyil aḍivaittiḍa vehu

azhahiya dantam tulakkubhavanāha

maḍutta paṇṇishaiyōḍaruhu uḷḷa

mangaḷa yamunai neer āḍuvānāha

viḍutta orumanaiyil agnihōtramum

vēṛoru manaiyil pārāyaṇa shāstramum

koḍutta dānamum dharmamum kaṇḍāl

kubēran ayyanukku mun emmāttiram ?

C3

ōḍivandu nāradaswāmi varavēṇum

nāmingē kāṇum! uvandu

aḍiyēn tarum upachārattai – uḷam

kuḷirndu koṇḍu ēṭṛiḍavēṇḍum

aḍi jāmbhavatee ! vandupāru ingē

yārivar teriyumō nāradar tānaḍi 

arumaiyāha pāḍuvār avar pāṭṭukku

aḍimaiyānēnaḍi āmānaḍi ena

C4

maṛai oliparaviḍa avaiyinil van-

daruḷi ninṛu kuṛai ēdenakkēṭṭa

mādhavan tirumalar vadanamadai nōkki

maṛumozhi uddhavan punnahai pookka

kuṛaivilāda kuṛai adudān kuṛai ena

kumuda malarndadu pōlaruḷ nōkka

koṇḍāḍi nāradar munnōrai nōkka

kumbiṭṭu innoru manaivazhi pārkka

C5

gandharuvar, kinnarar, vidyādharar

kavihaḷum mannarhaḷ pulavarhaḷ shoozha

kaṭṭiyam kooṛum bāṇarhaḷ nāradarai

kaṇḍōmenakkooṛa sabhai ellām ezha

shonda nāradarai kaṇḍu uṛavāḍi

konjam avaippaṇṇai ishaiyum enattāzha

toṭṭa moorchanaiyil sabhash! sabhash ena

shokkina sabhaiyōruḍan tānum shoozha 

C6

parimāṛina kaiyōḍu veḷivandu

paṇṇooru munivōi tozhuda kai pattu

bhāgyam aduvum kaimēl adu umai

pārttu nāḷācchu ena urai muḍittu

kāṛigaiyuḍan vehu urimai koṇḍu muni

karamaṇaittu kara kara venṛittu

kādalōḍu amaravaittu annam

kanivoḍu parimāṛina karivaradan 

C7

cchandanam koḍuttadoru veeḍu

tāmboolam aḷittadoru veeḍu

vandanam aḷittadoru veeḍu

atithiyāi azhaittadoru veeḍu 

sundaramāhavum pāṭṭukkēṭṭu uḷam

shokkinadānadu oru veeḍu

turiya veeḍu adu periya veeḍu tiru

dvārakai muzhuvadum hariveeḍu enṛu

C8

neerāḍinadoru veeḍu – shiṛuvaroḍu

pōrāḍinadoru veeḍu – piḷḷai

pōrāḍinadoru veeḍu – manai

yāḷuḍanē pēshuvadoru veeḍu

ērāḷamāhina pulavarukellām

irukaiyum pōrādu koḍuttadoruveeḍu

ingumoru kaṇṇan angumorukaṇṇan 

ingumangum oru kaṇṇan enṛa oru veeḍu

Meaning   

He blessed Narada who was seeking to know Hari, gave him salvation with his appearance, revealing that he is all of universe as proclaimed by him. 

The sixteen thousand wives considered their house as Vaikuntham as each one of them felt that He lived with them individually. 

The devotees worship at his lotus-like feet, waking him up from his sleep while sages Tumburu, Matanga, Shuka and Shaunaka sing Raga Boopalam in harmony. 

As priests chanting vedas surround Him, Narada worships even as he sings and strums the tanpura. 

He steps into the next house to brush his teeth and takes bath with water from the sacred Yamuna river accompanied by soulful music. In another house, agnihotram goes on while in the next house, sacred texts are being recited. The amount of riches He gave away as gifts would put to shame even Kubera. 

Krishna welcomes Narada introducing him to his wife Jambhavati as he explains to her that Narada sings well and that he himself is a slave to his music. 

He appears in the public hall seeking to know of citizens' complaints. In response, Uddhava smiles and says that the only complaint is that there is no complaint. Naradar smiles benevolently as he is totally satisfied with what he sees and then moves on to the next house. 

Gandharvas, Kinnaras, Vidhyadharas, bards, Kings and poets surround Narada as his presence was announced and the entire assembly stands up. They request Narada to sing and as he strums his tanpura, the crowd and Krshna applaud. 

Coming out without washing hands, embraces him warmly, invites him inside and treats him with all respect and serves him food. 

Narada was offered sandal paste in the next house, another welcomed him as a guest, another worshipped him ardently. One was enchanted with his music. All the houses in Dwaraka rejoiced as though they are all Hari's (Krshna's) house. 

In one house he took his bath and in another, played with the children. In one, he conversed with the wife and another gifted him with immense wealth. All the houses seemed to have Krshna – here, there and everywhere.

ஆரபி ஆதி

தரிசனம் தந்தே அருளினான்

மகா

தாமே நிகிலமென தாம் ஓதியபடி தாமோன அருளை தாமோதர ஹரி

தாமாரென வரும் நாரத மாமுனி தாம் உய்யவென்று தாம் மெய்ய நின்று 

அப

பரிஜனமுள்ள பதினாறாயிரம் என்னும் பத்தினிகள் மாமனையே 

பரமான வைகுண்டம் ஆக்கி தனித்தனியாய்

பகிர்ந்திருந்து மாதவன் தனையே 

ச1

தொண்டர் குல அரவிந்த மலரடியை தொழுது

கொண்டு துயில் எழுந்தருள பாட

தும்புரு மதங்க சுக சௌனக முனிவரும் ச்ருதி இழைத்தருள் பூபாளம் பாட 

பண்டனைய வேதம் பாடும் மறையவர்கள் பங்கு 

போட்டமளி அருகினில் கூட அதை பார்த்த நாரதரும் ச்ருதி சேர்த்த தந்தியிலே 

பாட்டொன்று பாட ஸேவித்து ஓட 

ச2

அடுத்த மனையில் அடி வைத்திட வெகு அழகிய தந்தம் துலக்குபவனாக

மடுத்த பண்ணிசையோடருகு உள்ள மங்கள யமுனை நீராடுவானாக விடுத்த ஒரு மனையில் அக்னி ஹோத்ரமும்

வேறொறு மனையில் பாராயண சாஸ்திரமும் கொடுத்த தானமும் தர்மமும் கண்டால் 

குபேரன் அய்யனுக்குமுன் எம்மாத்திரம்

ச3

ஓடி வந்து நாரதஸ்வாமி வரவேணும் நாம் இங்கே காணும் ! உவந்து அடியேன் தரும் உபசாரத்தை - உளம்

குளிர்ந்து கொண்டு ஏற்றிடவேண்டும் 

அடி ஜாம்பவதீ ! வந்து பாரு இங்கே யாரிவர் தெரியுமோ நாரதர் தானடி அருமையாக பாடுவார் அவர் பாட்டுக்கு

அடிமையானேனடி ஆமானடி என 

ச4

மறை ஒலி பரவிட அவையினில் வந்தருளி நின்று குறை ஏதெனக்கேட்ட மாதவன் திருமலர் வதனமதை நோக்கி

மறுமொழி உத்தவன் புன்னகை பூக்க

குறைவிலாத குறை அதுதான் குறை என  குமுதம் மலர்ந்தது போலருள் நோக்க

கொண்டாடி நாரதர் முன்னோரை நோக்க கும்பிட்டு இன்னொரு மனைவழி பார்க்க

ச5

கந்தர்வர் கின்னரர் வித்யாதரர் 

கவிகளும் மன்னர்கள் புலவர்கள் சூழ கட்டியம் கூரும் பாணர்கள் நாரதரை கண்டோம் என கூற ஸபையெல்லாம் எழ 

சொந்த நாரதரை கண்டு உறவாடி 

கொஞ்சம் அவைப்பண்ணை இசையும் எனத்தாழ 

தொட்ட மூர்ச்சனையில் ஸபாஷ் ஸபாஷ் என சொக்கின ஸபையோருடன் தானும் சூழ

ச6

பரிமாறின கையோடு வெளி வந்து

பண்ணூரு முனிவோய் தொழுத கை பத்து பாக்கியம் அதுவும் கை மேல் அது உமை 

பார்த்து நாளாச்சு என உரை முடித்து கறிகையுடன் வெகு உரிமை கொண்டு முனி 

கரமணைத்து கர கரவென்றித்து 

காதலோடு அமர வைத்து அன்னம் 

கனிவோடு பரிமாரின கரிவரதன்

ச7

சந்தனம் கொடுத்தது ஒரு வீடு

தாம்பூலம் அளித்ததொரு வீடு 

வந்தனம் அளித்ததொரு வீடு 

அதிதியாய் அழைத்ததொரு வீடு 

ஸுந்தரமாகவும் பாட்டு கேட்டு உளம் சொக்கினதானது ஒரு வீடு 

துரிய வீடு அது பெரிய வீடு திரு

த்வாரகை முழுவதும் ஹரி வீடு என்று 

ச8

நீராடினதொரு வீடு - சிறுவரோடு

போராடினதொரு வீடு - பிள்ளை

போராடினதொரு வீடு - மனை

யாளுடனே பேசுவதொரு வீடு

ஏராளமாகின புலவருக்கெல்லாம்

இருகையும் போராது கொடுத்ததொரு வீடு 

இங்குமொரு கண்ணன் அங்குமொரு கண்ணன் 

இங்குமங்கும் ஒரு கண்ணன் என்ற ஒரு வீடு

Ārabhi Ādi

P

darishanam tandē aruḷinān

MK

tāmē nikhilamena tāmōdiyapaḍi tāmōna aruḷai dāmōdarahari

tāmārena varum nārada māmuni tāmuyyavenṛu tāmmeiya ninṛu

AP

parijanamuḷḷa padinārāyiram ennum 

pattinihaḷ māmanaiyē

paramāna vaikuṇṭham ākkittanittaniyāi

pahirndu irundu mādhavan tanaiyē 

C1

toṇḍarkula aravinda malaraḍiyai tozhudu

koṇḍu tuyil ezhundaruḷa pāḍa

tumburu matanga shuka shownaka munivarum

shruti izhaittaruḷ bhoopāḷam pāḍa 

paṇḍanaiya vēdam pāḍum maṛaiyavarhaḷ pangu

pōṭṭamaḷi aruhinil kooḍa – adai

pārtta nāradarum shruti shērtta tandiyilē

pāṭṭonṛu pāḍa sēvittu ōḍa 

C2

aḍutta manaiyil aḍivaittiḍa vehu

azhahiya dantam tulakkubhavanāha

maḍutta paṇṇishaiyōḍaruhu uḷḷa

mangaḷa yamunai neer āḍuvānāha

viḍutta orumanaiyil agnihōtramum

vēṛoru manaiyil pārāyaṇa shāstramum

koḍutta dānamum dharmamum kaṇḍāl

kubēran ayyanukku mun emmāttiram ?

C3

ōḍivandu nāradaswāmi varavēṇum

nāmingē kāṇum! uvandu

aḍiyēn tarum upachārattai – uḷam

kuḷirndu koṇḍu ēṭṛiḍavēṇḍum

aḍi jāmbhavatee ! vandupāru ingē

yārivar teriyumō nāradar tānaḍi 

arumaiyāha pāḍuvār avar pāṭṭukku

aḍimaiyānēnaḍi āmānaḍi ena

C4

maṛai oliparaviḍa avaiyinil van-

daruḷi ninṛu kuṛai ēdenakkēṭṭa

mādhavan tirumalar vadanamadai nōkki

maṛumozhi uddhavan punnahai pookka

kuṛaivilāda kuṛai adudān kuṛai ena

kumuda malarndadu pōlaruḷ nōkka

koṇḍāḍi nāradar munnōrai nōkka

kumbiṭṭu innoru manaivazhi pārkka

C5

gandharuvar, kinnarar, vidyādharar

kavihaḷum mannarhaḷ pulavarhaḷ shoozha

kaṭṭiyam kooṛum bāṇarhaḷ nāradarai

kaṇḍōmenakkooṛa sabhai ellām ezha

shonda nāradarai kaṇḍu uṛavāḍi

konjam avaippaṇṇai ishaiyum enattāzha

toṭṭa moorchanaiyil sabhash! sabhash ena

shokkina sabhaiyōruḍan tānum shoozha 

C6

parimāṛina kaiyōḍu veḷivandu

paṇṇooru munivōi tozhuda kai pattu

bhāgyam aduvum kaimēl adu umai

pārttu nāḷācchu ena urai muḍittu

kāṛigaiyuḍan vehu urimai koṇḍu muni

karamaṇaittu kara kara venṛittu

kādalōḍu amaravaittu annam

kanivoḍu parimāṛina karivaradan 

C7

cchandanam koḍuttadoru veeḍu

tāmboolam aḷittadoru veeḍu

vandanam aḷittadoru veeḍu

atithiyāi azhaittadoru veeḍu 

sundaramāhavum pāṭṭukkēṭṭu uḷam

shokkinadānadu oru veeḍu

turiya veeḍu adu periya veeḍu tiru

dvārakai muzhuvadum hariveeḍu enṛu

C8

neerāḍinadoru veeḍu – shiṛuvaroḍu

pōrāḍinadoru veeḍu – piḷḷai

pōrāḍinadoru veeḍu – manai

yāḷuḍanē pēshuvadoru veeḍu

ērāḷamāhina pulavarukellām

irukaiyum pōrādu koḍuttadoruveeḍu

ingumoru kaṇṇan angumorukaṇṇan 

ingumangum oru kaṇṇan enṛa oru veeḍu

Meaning   

He blessed Narada who was seeking to know Hari, gave him salvation with his appearance, revealing that he is all of universe as proclaimed by him. 

The sixteen thousand wives considered their house as Vaikuntham as each one of them felt that He lived with them individually. 

The devotees worship at his lotus-like feet, waking him up from his sleep while sages Tumburu, Matanga, Shuka and Shaunaka sing Raga Boopalam in harmony. 

As priests chanting vedas surround Him, Narada worships even as he sings and strums the tanpura. 

He steps into the next house to brush his teeth and takes bath with water from the sacred Yamuna river accompanied by soulful music. In another house, agnihotram goes on while in the next house, sacred texts are being recited. The amount of riches He gave away as gifts would put to shame even Kubera. 

Krishna welcomes Narada introducing him to his wife Jambhavati as he explains to her that Narada sings well and that he himself is a slave to his music. 

He appears in the public hall seeking to know of citizens' complaints. In response, Uddhava smiles and says that the only complaint is that there is no complaint. Naradar smiles benevolently as he is totally satisfied with what he sees and then moves on to the next house. 

Gandharvas, Kinnaras, Vidhyadharas, bards, Kings and poets surround Narada as his presence was announced and the entire assembly stands up. They request Narada to sing and as he strums his tanpura, the crowd and Krshna applaud. 

Coming out without washing hands, embraces him warmly, invites him inside and treats him with all respect and serves him food. 

Narada was offered sandal paste in the next house, another welcomed him as a guest, another worshipped him ardently. One was enchanted with his music. All the houses in Dwaraka rejoiced as though they are all Hari's (Krshna's) house. 

In one house he took his bath and in another, played with the children. In one, he conversed with the wife and another gifted him with immense wealth. All the houses seemed to have Krshna – here, there and everywhere.

ஆரபி ஆதி

தரிசனம் தந்தே அருளினான்

மகா

தாமே நிகிலமென தாம் ஓதியபடி தாமோன அருளை தாமோதர ஹரி

தாமாரென வரும் நாரத மாமுனி தாம் உய்யவென்று தாம் மெய்ய நின்று 

அப

பரிஜனமுள்ள பதினாறாயிரம் என்னும்

பத்தினிகள் மாமனையே 

பரமான வைகுண்டம் ஆக்கி தனித்தனியாய்

பகிர்ந்திருந்து மாதவன் தனையே 

ச1

தொண்டர் குல அரவிந்த மலரடியை தொழுது

கொண்டு துயில் எழுந்தருள பாட

தும்புரு மதங்க சுக சௌனக முனிவரும் 

ச்ருதி இழைத்தருள் பூபாளம் பாட 

பண்டனைய வேதம் பாடும் மறையவர்கள் பங்கு 

போட்டமளி அருகினில் கூட அதை 

பார்த்த நாரதரும் ச்ருதி சேர்த்த தந்தியிலே 

பாட்டொன்று பாட ஸேவித்து ஓட 

ச2

அடுத்த மனையில் அடி வைத்திட வெகு

அழகிய தந்தம் துலக்குபவனாக

மடுத்த பண்ணிசையோடருகு உள்ள 

மங்கள யமுனை நீராடுவானாக

விடுத்த ஒரு மனையில் அக்னி ஹோத்ரமும்

வேறொறு மனையில் பாராயண சாஸ்திரமும்

கொடுத்த தானமும் தர்மமும் கண்டால் 

குபேரன் அய்யனுக்குமுன் எம்மாத்திரம்

ச3

ஓடி வந்து நாரதஸ்வாமி வரவேணும் 

நாம் இங்கே காணும் ! உவந்து

அடியேன் தரும் உபசாரத்தை - உளம்

குளிர்ந்து கொண்டு ஏற்றிடவேண்டும் 

அடி ஜாம்பவதீ ! வந்து பாரு இங்கே 

யாரிவர் தெரியுமோ நாரதர் தானடி 

அருமையாக பாடுவார் அவர் பாட்டுக்கு

அடிமையானேனடி ஆமானடி என 

ச4

மறை ஒலி பரவிட அவையினில் வந்-

தருளி நின்று குறை ஏதெனக்கேட்ட

மாதவன் திருமலர் வதனமதை நோக்கி

மறுமொழி உத்தவன் புன்னகை பூக்க

குறைவிலாத குறை அதுதான் குறை என 

குமுதம் மலர்ந்தது போலருள் நோக்க

கொண்டாடி நாரதர் முன்னோரை நோக்க

கும்பிட்டு இன்னொரு மனைவழி பார்க்க

ச5

கந்தர்வர் கின்னரர் வித்யாதரர் 

கவிகளும் மன்னர்கள் புலவர்கள் சூழ 

கட்டியம் கூரும் பாணர்கள் நாரதரை 

கண்டோம் என கூற ஸபையெல்லாம் எழ 

சொந்த நாரதரை கண்டு உறவாடி 

கொஞ்சம் அவைப்பண்ணை இசையும் எனத்தாழ 

தொட்ட மூர்ச்சனையில் ஸபாஷ் ஸபாஷ் என 

சொக்கின ஸபையோருடன் தானும் சூழ

ச6

பரிமாறின கையோடு வெளி வந்து

பண்ணூரு முனிவோய் தொழுத கை பத்து 

பாக்கியம் அதுவும் கை மேல் அது உமை 

பார்த்து நாளாச்சு என உரை முடித்து 

கறிகையுடன் வெகு உரிமை கொண்டு முனி 

கரமணைத்து கர கரவென்றித்து 

காதலோடு அமர வைத்து அன்னம் 

கனிவோடு பரிமாரின கரிவரதன்

ச7

சந்தனம் கொடுத்தது ஒரு வீடு

தாம்பூலம் அளித்ததொரு வீடு 

வந்தனம் அளித்ததொரு வீடு 

அதிதியாய் அழைத்ததொரு வீடு 

ஸுந்தரமாகவும் பாட்டு கேட்டு உளம் 

சொக்கினதானது ஒரு வீடு 

துரிய வீடு அது பெரிய வீடு திரு

த்வாரகை முழுவதும் ஹரி வீடு என்று 

ச8

நீராடினதொரு வீடு - சிறுவரோடு

போராடினதொரு வீடு - பிள்ளை

போராடினதொரு வீடு - மனை

யாளுடனே பேசுவதொரு வீடு

ஏராளமாகின புலவருக்கெல்லாம்

இருகையும் போராது கொடுத்ததொரு வீடு 

இங்குமொரு கண்ணன் அங்குமொரு கண்ணன் 

இங்குமங்கும் ஒரு கண்ணன் என்ற ஒரு வீடு