Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / gōkulatteruvinilē

Index of Compositions

gōkulatteruvinilē

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Chenchuruṭṭi Ādi

P

gōkulatteruvinilē – janma 

kōṭitavam sheidālum kāṇariyā mātavam

nāḍittavazhndu varudē – navaneeta nāṭṭiyamāḍi varudē

MK

kumudam malarndu muzhumadi kāṇudu kozhikamalam alarndu kadir kāṇudu

amudam maṇandu engō pōhudu antarangamaṭṭum ingu āhudu 

AP

vāri vahiḍeḍuttu malligai poocchooḍi vāriviṭṭudu cchāyakoṇḍai

vāriviṭṭadu cchāyakoṇḍai māmayil peeli adan aṇḍai

MK

varishaiyāha tōraṇamaṇi kaṭṭi marakata maṇi muttāramadu kaṭṭi 

irupuṛa chooraṇa kuntalangaḷoḍu irum irum ena viḷaiyāḍu maṇichuṭṭi

darishanamuṛa vehu lāvaṇyamāha tamāla talaiyalankāramadu kaṭṭi

tayiroḍu veṇṇaiyum uṛiyoḍu pālaiyum taṭṭi koṭṭi varum paramēṭṭi idō eṭṭi 

C1

vēdānta mozhiyinuḷ viḷaiyum parattuvam orukai 

veṇṇaikku shonnapaḍi āḍum sarasattuvam

nādānta mōnattiḷ āḍum praṇavatvam

nāṇakkuzhal ishaikkum ānanda rasatvam

MK

tātaka dhiri taiyya ena tāḷamiḍu taṇḍaiyoḍu naṭamāḍi

tayirukkoruvahai pālukkoru jati kaḍainda dadhi kaḍainda veṇṇaikkoru oru naṭanam

teetaṛa vahuttu niruttamāḍudu shenṛorukāl kanṛin pin ōḍudu 

ādaravuḍan en nenjam puhundu attanaiyum koḷḷai koṇḍāhudu

C2

pashu veṇṇai tayir koṇḍa uṛi kaṭṭinārō

paramporuḷ tanaipiḍikka poṛi kaṭṭinārō

tashai mooḍum uḍal koḷ piṛavi eḍuttārō – illai 

dāmōdaranukku māḷigai eḍuttārō

MK

dishai parandu oḷi veeshum shenkadirum oḷipayinṛa poruḷiduvō

teruparanda pudiyaḷaindazhahoḍu shiṛuvar aruhāḍi sheyal aṇindadō

ishai ezhuduḷai – tiṛanadu viḷangu kuzhal ēnda karamāhi ninṛadō – alladu

enadunadu ena pēshappaḍum māyaiyai iḷankanṛākki oṭṭiyaṇaittadō

C3

endapporuḷ uvamai shonnālum adaṛkkumoru

ēṭṛamai kaṛpikkum alankāram

antarangamellām vilaipēshi – koḷḷai koḷḷum

aḷavukkaḍangā oyyāram

chindittavarukellām tittikkum tēnaḍi

tittikkum tēnai minjum engaḷ perumānaḍi

antamihu tunbattai poruḷāha chooṭṭi 

aṇḍattai maṇakka vaikkum engaḷ perumānaḍi 

C4

nazhuvi vizhum kambaḷattai laghavamāha eḍuttu

nāgareegamāi aṇiyum azhahu – tanakku 

ēzhu eerulaham vilai kāṇādu pōḍi

ēṭṛam teriyādaḍiyō – unakku 

tozhum aḍiyavar tanakkummoru leelai

duṭṭartamai azhikka oru leelai

sundaramihu oru gōpiyar shonna vaṇṇam

turu turuvena viḷaiyāḍum oru vēlai

kozhu kozhuvadanattellai vahuttidum

kuṇḍalangaḷukkōyāda vēlai

kunindu paḍam virinda kaḷeeyan talai

naḍandadoru leelai nallavēḷai

C5

ettaṇai yōgiyarhaḷ maṇṇāi irukkārō

engaḷ kaṇṇan kazhal paṭṭu munna

ittanai pērinuḷḷum bhākkiyam shilarukku

engaḷaiyyan eḍuttoru piḍi tinna

MK

iḷankamalam – taḷam virindu vazhiyinil – ingumangum nōkkudu poruḷ enna

engēnum aḍiyārhaḷ kooviḍa adai irundaruḷakkāṇuvadō – oru chinna

vaḷam kaṇḍa kazhal vazhiyē tuḷḷiḍum pashunkanṛu varuvadō adumunna

vānarānavar poomalar tooviḍa mādhavayōgiyarānavar ēviḍa 

Meaning

In the streets of Gokulam, here is a sight which even one who does penance for a million years cannot get. It comes dancing a dance of fresh butter!! Like the lily which blooms to see the moon, like the lotus blooming to see the sun, like the fragrance of the nectar that goes I know not where, so too my inner thoughts are centered ( on this spectacle).

On the hair that has been combed and tied into a bun, is a string of jasmine flowers and beside it a peacock feather. Wearing decorative bells tied in a row, pearl strings and emerald beads, a jewelled ornament on the hair line playfully swinging, a tamala leaf gracefully tied, he comes scattering the pots of milk and curd– that charming child – to see him so near ......... 

He is on the one hand the ultimate truth that is spoken in the Vedas and yet is the one who indulges in dalliance to get some butter. He is the Pranava that resides in music and yet is the blissful essence that plays the flute.

With jingling anklets that dance to a rhythm, a dance for milk, a dance for curd and yet another for butter, one leg runs after a calf while another leg steps with love into my heart and steals all of me.

Did they hang pots to store butter and curds or was it a trap to catch the supreme god? Did they take a birth with a body made of flesh or was it all just a palace for Damodaran (to occupy)?

Is he the meaning behind the glowing sun that shines in all directions? Or is he the one that played in the dust with other boys on the streets. Is he the hand that held skillfully the flute that emitted music? Or is he the one that controlled that calf – the possessiveness in everyone that is born of illusion and ego?

He is so beautifully dressed that whatever compared to it falls short. His charm steals all hearts. He is the sweet honey for those whose thoughts dwell on Him. He in fact surpasses the sweetest honey. He dispels the dark troubles and makes the world a fragrant place!

The way he catches with grace that slipping shawl is so beautiful that the fourteen worlds cannot be a fair exchange for it! The sports he enacts are numerous. He enacts a sport for the devotees and yet another to destroy the wicked. He dances to the tunes of a beautiful gopi. The dangling earrings that define the boundaries of his face are forever dancing (with all these sports). On the hood of the serpent kaliya, he danced – our good fortune.

How many sages became earth (mud) to be trampled by the feet of our Krishna! Of those some were so fortunate that they were part of the fistful (of mud) that our Lord ate. A tender lotus spreading its petals looks here and there. What is its intent? Is it seeking to bless some devotee calling out (to him). A foot (marked with circles going clockwise) is jumping around with a calf preceding him and the celestial beings showering flowers egged on by sages of great renown.

செஞ்சுருட்டி ஆதி

கோகுலத் தெருவினிலே – ஜன்ம

கோடித்தவம் செய்தாலும் காணரியா மாதவம்

நாடித் தவழ்ந்து வருதே – நவனீத நாட்டியமாடி வருதே

மக

குமுதம் மலர்ந்து முழுமதி காணுது கொழிகமலம் அலர்ந்து கதிர் காணுது

அமுதம் மணந்து எங்கோ போகுது அந்தரங்கமட்டும் இங்கு ஆகுது 

அப

வாரி வகிடெடுத்து மல்லிகை பூச்சூடி வாரிவிட்டுது சாயக் கொண்டை

வாரிவிட்டது சாயக்கொண்டை மாமயில் பீலி அதன் அண்டை

மக

வரிசையாக தோரணமணி கட்டி மரகதமணி முத்தாரமது கட்டி

இருபுறச் சூரணக் குந்தலங்களொடு இரும் இரும் என விளையாடு மணிச்சுட்டி

தரிசனமுற வெகு லாவண்யமாக தமாலத்தலையலங்காரமது கட்டி

தயிரொடு வெண்ணையும் உறியொடு பாலையும்தட்டி கொட்டி வரும் பரமேட்டி இதோ எட்டி 

ச1

வேதாந்த மொழியினுள் விளையும் பரத்துவம் ஒருகை

வெண்ணைக்கு சொன்னபடி ஆடும் ஸரஸத்துவம்

நாதாந்த மோனத்தில் ஆடும் ப்ரணவத்வம்

நாணக்குழல் இசைக்கும் ஆனந்த ரஸத்வம்

மக

தாதக திரிதைய என தாளமிடு தண்டையோடு நடமாடி

தயிருக் கொருவகை பாலுக்கொரு ஜதி ததி கடைந்த வெண்ணைக்கொரு நடனம்

தீதற வகுத்து நிருத்தமாடுது சென்றொருகால் கன்றின்பின் ஓடுது

ஆதரவுடன் என் நெஞ்சம் புகுந்து அத்தனையும் கொள்ளை கொண்டாகுது

ச2

பசு வெண்ணை தயிர் கொண்ட உறி கட்டினாரோ

பரம்பொருள் தனைப்பிடிக்கப் பொறி கட்டினாரோ

தசை மூடும் உடல் கொள் பிறவி எடுத்தாரோ - இல்லை

தாமோதரனுக்கு மாளிகை எடுத்தாரோ

மக

திசை பரந்து ஒளி வீசும் செங்கதிரும் திங்களும் ஒளிபயின்ற பொருளிதுவோ

தெருபரந்த புதியளைந்தழகொடு சிறுவர் அருகாடி செயலணிந்ததோ

இசை எழுதுளை திறனது விளங்கு குழல் ஏந்த கரமாகி நின்றதோ - அல்லது

எனதுனது என பேசப்படும் மாயையை இளங்கன்றாக்கி ஒட்டியணைத்ததோ

ச3

எந்தப் பொருள் உவமை சொன்னாலும் அதற்குமொரு

ஏற்றமைக் கற்பிக்கும் அலங்காரம்

அந்தரங்கமெல்லாம் விலைபேசி கொள்ளை கொள்ளும்

அளவுக்கடங்கா ஒய்யாரம்

சிந்தித்தவருக்கெல்லாம் தித்திக்கும் தேனடி

தித்திக்கும் தேனை மிஞ்சும் எங்கள் பெருமானடி

அந்தமிகு இன்பத்தை பொருளாகச் சூட்டி

அண்டத்தை மணக்க வைக்கும் எங்கள் பெருமானடி

ச4

நழுவி விழும் கம்பளத்தை லாவகமாய் எடுத்து

நாகரீகமாயணியும் அழகு – தனக்கு

ஏழு ஈருலகம் விலை காணாது போடி

ஏற்றம் தெரியாதடியோ உனக்கு

தொழும் அடியவர் தனக்குமொரு லீலை

துட்டர் தமையழிக்க ஒரு லீலை

சுந்தரமிகு ஒரு கோபியர் சொன்ன வண்ணம் 

துறு துறுவென விளையாடும் ஒரு வேலை

கொழு கொழு வதனத் தெல்லை வகுத்திடும்

குண்டலங்களுக்கோயாத வேலை

குனிந்து படம் விரிந்த காளியன் தலை

நடந்த்தொரு லீலை – நல்ல வேளை 

ச5

எத்தனை யோகியர்கள் மண்ணாய் இருக்காரோ

எங்கள் கண்ணன் கழல் பட்டு முன்ன

இத்தனை பேரினுள்ளும் பாக்கியம் சிலருக்கு

எங்களய்யன் எடுத்தொரு பிடி தின்ன

மக

இளங்கமலம் தளம் விரிந்து வழியினில் இங்குமங்கும் நோக்குது பொருள் என்ன

எங்கேனும் அடியார்கள் கூவிட அதை இருந்தருளக் காணுவதோ- ஒரு சின்ன

வளம் கண்ட கழல் வழியே துள்ளிடும் பசுங்கன்று வருவதோ அது முன்ன

வானரானவர் பூமலர் தூவிட மாதவயோகியரானவர் ஏவிட