Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / kalyāṇa kōlāhalamē

Index of Compositions

kalyāṇa kōlāhalamē

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Kēdāram Ādi

P

kalyāṇa kōlāhalamē

kaṇṇirundāl kāṇa vēṇumē

kaṇṇanukkum rādhikaikkum puṇṇiyattāl vanda tiru

C1

teeyinai valam vandār agni

dēvanum padam paṇindār

āya oru kālamadil teeyinai valam vanda

‘annai jānaki ivaḷ’ enṛu manam mahizhndār

C2

kōṭṭaiyilē poottaḍangaḷ pōṭṭār

koṇḍu vandu ponmalarai pōṭṭār

māṭṭuraiyum nugattaḍi mangaiyar shiram uṇartthi

pōṭṭu ninṛa māngalyatthai pōṭṭār

pootta mukham nērā vaṭṭam pōṭṭār 

C3

aiyanai maṇaiyil kāṇa irutti

āḍaiyaṇihaḷ palavum tirutti

uyyavum ulahamellām oṇḍodi talaivi tammai

oyyāramāhavum valam vaittār vāhuḷḷa mādarhaḷum ninaittār 

C4

kāṇāda kaṇṇellām oru kaṇṇō

kaṇṇum karutiraṇḍum oṇṇō

vānōḍu maṇṇulahum tānāha uyyndu viḍum

mangai nāṇa kuninda jālam 

C5

kēnasa kēnattai angu shonnār - idai kēṭṭa

indira dēvanum shonnār 

vānamum maṇṇum aḷanda māyanum

ēdidaṛkku mannaruḷ onre pōdādō

inda maṇṇulahum sheitavam pōrādō 

C6

neela oḷi veeshuhinṛa jyoti - avaḷ

mālaiyashai mēniyilē pādi

kāla kālam ettanaihaḷ kāttirundāḷō tavamum

kaṇḍara kaṇakku muḍiyādu

kaṇṇellām niraindadē ippōdu

C7

vāi niraiya mandirangaḷ koovi

mandirattu akṣhadaiyait toovi

dayai kaḍal mēlē pōṭṭu

‘tan tavam’ ‘tan tavam’ enṛu shonnār

kaṇṇan ‘en tavam’ ‘en tavam’ enṛu shonnār

C8

shonnavarhaḷ nāmam sheida puṇṇiyam peṛa

tonṛu kōṭi nāmellām sholliyum aṛiyādān 

jyotiyarkku kulam shollavēṇumō

anda tooyavan aḍangumenṛu kāṇumō 

Meaning

You are blessed if your eyes witness the grand wedding of Radha and Krishna. The couple circle  the sacred fire but Agni bowed down to them as he pleasantly remembered that this was the same Sita who once circled fire (during Agni pariksha) 

The way to the palace was paved with flowers. More flowers were showered on them as he placed the yoke on the damsel’s head and tied the mangalya.

The decked up bridegroom was presented in the palace and the bride was made to go around by the elders. The world rejoiced at the scene.

Eyes which did not witness this scene are not worth being called as eyes. Heaven and Earth are blessed to see the scene of a shy Radha bowing her head.

He uttered the sacred kenasa mantra. Listening to it, Indra said, “Aren’t His kingly powers enough for the one who measured Heaven and Earth?” Isn’t the Earth already blessed enough?

Her body was half covered by the blue glow from her necklace. Wonder how many penances she did and how long she waited (to get Krishna as her husband) but now the scene of the wedding is so satisfying to witness.

Many slokas were recited and the sacred rice was showered on them as they muttered that they were fortunate to witness the scene as a result of their penance but Krishna claimed it was a result of his penance. 

He cannot be known by millions of names; yet the names uttered are blessed;  It is not possible to reveal His caste to the astrologer (purohit), because He cannot be contained under any caste.

கேதாரம் ஆதி

கல்யாண கோலாஹலமே

கண்ணிருந்தால் காண வேணுமே

கண்ணனுக்கும் ராதிகைக்கும் புண்ணியத்தால் வந்த திருக 

ச1

தீயினை வலம் வந்தார் அக்னி

தேவனும் பதம் பணிந்தார் 

ஆய ஒரு காலமதில் தீயினை வலம் வந்த

'அன்னை ஜானகி இவள்' என்று மனம் மகிழ்ந்தார்

ச2

கோட்டையிலே பூத்தடங்கள் போட்டார்

கொண்டு வந்து பொன்மலரைப் போட்டார்

மாட்டுறையும் நுகத்தடி மங்கையர் சிரம் உணர்த்திப்

போட்டு நின்ற மாங்கல்யத்தைப் போட்டார்

பூத்த முகம் நேரா வட்டம் போட்டார் 

ச3

அய்யனை மனையில் காண இருத்தி 

ஆடையணிகள் பலவும் திருத்தி

உய்யவும் உலகமெல்லாம் ஒண்டொடித் தலைவி தம்மை

ஒய்யாரமாகவும் வலம் வைத்தார் வாகுள்ள மாதர்களும் நினைத்தார்

ச4

காணாத கண்ணெல்லாம் ஒரு கண்ணோ

கண்ணும் கருத்திரண்டும் ஒண்ணோ?

வானோடு மண்ணுலகும் தானாக உய்ந்து விடும்

மங்கை நாணக் குனிந்த ஜாலம்  

ச5

கேனஸ கேனத்தை அங்கு சொன்னார் - இதைக் கேட்ட

இந்திரத் தேவனும் சொன்னார்

வானமும் மண்ணும் அளந்த மாயனும்

ஏதிதற்கு மன்னருள் ஒன்றே போதாதோ

இந்த மண்ணுலகும் செய்தவம் போறாதோ

ச6

நீல ஒளி வீசுகின்ற ஜோதி - அவள்

மாலையசை மேனியிலே பாதி

கால கால மெத்தனைகள் காத்திருந்தாளோ தவமும்

கண்டறக் கணக்கு முடியாது

கண்ணெல்லாம் நிறைந்ததே இப்போது 

ச7

வாய் நிறைய மந்திரங்கள் கூவி

மந்திரத்து அக்ஷதையைத் தூவி

தயைக் கடல் மேலே போட்டுத்

‘தன் தவம்’ ‘தன் தவம்’ என்று சொன்னார்

கண்ணன் ‘என் தவம்’ ‘என் தவம்’ என்று சொன்னார் 

ச8

சொன்னவர்கள் நாமம் செய்த புண்ணியம் பெற

தொன்று கோடி நாமெல்லாம் சொல்லியுமறியாதான்

சோதியர்க்குக் குலம் சொல்லவேணுமோ

அந்தத் தூயவன் அடங்குமென்று காணுமோ 