Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / manṛuḷāḍi mahizhndē

Index of Compositions

manṛuḷāḍi mahizhndē

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga, Tala and authentic notations are being sought
Bhairavi Roopakam

P

manṛuḷāḍi mahizhndē peṭṛa mahanē ārumukhanē – inda 

MK

mayilāpuri nagar mēviyum mayilānadu naharādena 

oyilāhavum naṭamāḍiya uruvē shivaguruvē – tiru

AP

kunṛu panniraṇḍāl ānadō shiva 

kumarā un tiruttōḷhaḷ 

kulam uyya mun vandu ninṛadō – undan 

koimalarttāmarait tāḷhaḷ? 

 MK

kumudam peṛu chandira kalai – amudam peṛu mandara malai 

timiram keḍum un mukham taru – darishana nilai tahum tahum ena

C

pacchai marakata neelam muttu 

padumarāgam vaittizhaitta pavazhamō viritta tōhai 

paranda tiruvāshi kōlam 

ecchayal enṛaṛiyādē – nee 

ēndiya vēl enna jālam

MK

eṭṛukkō āvuṇarhaḷ tanakkō manamuruhavō 

aḍiyavarhaḷ kuḍi uyara tavamuṇarum 

veṭṛikkō virimaṛai tanakkō vidhipaṇiyavō 

gatiyaṛiya tamarapati kazhaṛumozhi 

paṭṛukkō palavaramadaṛkkō padam taruhavō 

paramashiva guruparanē sharavaṇanē

பைரவி  ரூபகம்

ப

மன்றுளாடி மகிழ்ந்தே பெற்ற மகனே ஆறுமுகனே - இந்த

மக

மயிலாபுரி நகர் மேவியும் மயிலானது நகராதென 

ஒயிலாகவும் நடமாடிய உருவே சிவகுருவே திரு 

அப

குன்று பன்னிரண்டால் ஆனதோ? சிவக்

குமரா உன் திருத்தோள்கள்

குலம் உய்ய முன் வந்து நின்றதோ - உந்தன்

கொய்மலர்த் தாமரைத் தாள்கள்?

மக

குமுதம் பெறு சந்திர கலை - அமுதம் பெறு மந்தர மலை

திமிரம் கெடும் உன் முகம் தரு தரிசன நிலை தகும் தகும் என

ச

பச்சை மரகத நீலம் - முத்து

பதுமராகம் வைத்திழைத்த பவழமோ விரித்த தோகை

பரந்த திருவாசிக் கோலம்

எச்செயல் என்றறியாதே - நீ

ஏந்திய வேல் என்ன ஜாலம்

 மக

எற்றுக்கோ அவுணர்கள் தனக்கோ மனமுருகவோ

அடியவர்கள் குடி உயர தவமுணரும்

வெற்றிக்கோ விரிமறை தனக்கோ விதிபணியவோ

கதியறிவ தமரபதி கழறுமொழிப்

பற்றுக்கோ பலவரமதற்கோ பதம் தருகவோ

பரமசிவ குருபரனே சரவணனே