Download Venkata Kavi app
Shahāna | Ādi |
P | nanṛāha iru tāyē – yashōdē |
MK | nandakumāranum rāmanum neeyum sondamōḍu kulam viḷanga viḷanga pallānḍu vāzhvāyē! pala nooṛāyiram kōṭi pallānḍu vāzhvāyē |
AP | kunṛāda puhazhōḍu kulamum shelvamum kuṛaiyāda tozhuvamum niṛaivāna pashuvum tōnṛāna tavamum tōnṛinadō ena toomalar kaṇṇaṇum neeyum palanoorāyiram kōṭi |
C |
|
1 | appanai pōlpiḷḷai tappāmal irukku ānālum nandanilum ivan nalla kaṛuppu tappāmal kaṇṇanai kāppadun poṛuppu shariyō tappō pēchil karuttukaḷ irukku |
2 | kaṇṇanai teruvinil alaiyaviḍādē kaṇḍavar varuvārhaḷ kaiyil koḍādē maṇṇaiyum kallaiyum tinnaviḍādē – undan māmi nān shonna shollai maṛandupōhādē |
3 | nandanum kuzhandaiyāi irundanda kālam shahāna rāgattilē azhuvān sholvōm innāḷum maindanum avvidamē irukkān ānālum māmuni gargar shollum poikkādu orukālum |
4 | mootadu mōzhai iḷaiyadu kāḷai enṛu munnōr shol uṇmaiyāi irukkum oruvēḷai vāittadenṛun kaṇṇanai konjiḍum vēḷai adō vandu ninṛa rāman manattil ēdō kavalai |
5 | piḷḷai enṛāl maṭṛa piḷḷaipōl ivanillai pēchilum azhahilum ulagamē koḷḷai uḷḷadai shollavō enakkuyirāshai illai nān oru kōṭi vāzhndālum pādakam illai |
6 | un māmanukkum enakkum uṇḍoru pēcchu uṇmaiyāi enakkudān tōlviyāi pōcchu un tōlviyāl endan nagaiyellām pōcchu irundāl enna endan pēranukkācchu |
7 | nam kuladeivatukku poojaiyai pōḍu nāzhi tavarāmal kaṇ shuṭṛippōḍu shemmaiyāi andaṇarkku pandiyai pōḍu en shelva marumahaḷē unakku yārudān eeḍu? |
சஹானா | ஆதி |
ப | நன்றாக இரு தாயே - யசோதே |
நந்த குமாரனும் ராமனும் நீயும் சொந்தமோடு குலம் விளங்க விளங்கப் பல்லாண்டு வாழ்வாயே - பலநூறாயிரம் கோடி | |
அப | குன்றத புகழோடு குலமும் செல்வமும் குறையாத தொழுவமும் நிறைவான பசுவும் தொன்றானத்தவமும் தோன்றினதோ எனத் தூமலர் கண்ணனும் நீயும் பல நூறாயிரம் கோடிப் |
ச |
|
1 | அப்பனைப்போல் பிள்ளைத் தப்பாமல் இருக்கு ஆனாலும் நந்தனிலும் இவன் நல்ல கறுப்பு தப்பாமல் கண்ணனைக் காப்பதுன் பொறுப்பு சரியோ தப்போ பேச்சில் கருத்துக்கள் இருக்கு |
2 | கண்ணனைத் தெருவினில் அலைய விடாதே கண்டவர் வருவார்கள் கையில் கொடாதே மண்ணையும் கல்லையும் தின்ன விடாதே - உந்தன் மாமி நான் சொன்ன சொல்லை மறந்து போகாதே |
3 | நந்தனும் குழந்தையாய் இருந்தந்தக் காலம் சஹானா ராகத்திலே அழுவான் சொல்வோம் இந்நாளும் மைந்தனும் அவ்விதமே இருக்கான் ஆனாலும் மாமுனி கர்க்கர் சொல்லும் பொய்க்காது ஒரு காலும் |
4 | மூத்தது மோழை இளையது காளை என்று முன்னோர் சொல் உண்மையாய் இருக்கும் ஒருவேளை வாய்த்த தென்றுன் கண்ணனைக் கொஞ்சிடும் வேளை அதோ வந்து நின்ற ராமன் மனத்தில் ஏதோ கவலை |
5 | பிள்ளை என்றால் மற்ற பிள்ளை போல் இவன் இல்லை பேச்சிலும் அழகிலும் உலகமே கொள்ளை உள்ளத்தைச் சொல்லவோ எனக்குயிராசை இல்லை நான் ஒரு கோடி வாழ்ந்தாலும் பாதகம் இல்லை |
6 | உன் மாமனுக்கும் எனக்கும் உண்டொரு பேச்சு உண்மையாய் எனக்குத்தான் தோல்வியாய் போச்சு என் தோல்வியால் எந்தன் நகையெல்லாம் போச்சு இருந்தால் என்ன எந்தன் பேரனுக்காச்சு |
7 | நம் குல தெய்வத்துக்குப் பூஜையைப் போடு நாழி தவறாமல் கண் சுற்றிப் போடு செம்மையாய் அந்தணர்க்குப் பந்தியைப் போடு என் செல்வ மருமகளே உனக்கு யாருதான் ஈடு |