Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / ōrān oruvan kuzhaloodum

Index of Compositions

ōrān oruvan kuzhaloodum

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Ārabhi Ādi

P

ōrān oruvan kuzhaloodum tiruḍan ingu 

nērāha varuhindṛān ungaḷ 

nenjamellām koḷḷaippōhavō 

MK

eerēzhulahamelām avanukkoru bhakṣhaṇam 

uṛakkam viṭṭenzhindirumē inda kṣhaṇam

AP

nērāhattalai mēlē tōhai ondṛu kāṭṭi 

neṭṛiḍai āḍuhindṛa neela maṇi shooṭṭi 

vārāda karunkoondal vandalaiya kāṭṭi inda 

vazhi nōkki varuhindṛān pādam koṇḍa maṭṭum eṭṭi

MK

varinda shezhungkanaka maṇiyāḍai 

aṇinda neela niṛattavan 

padumarāha gōmēdaka marakata 

pavazha maṇiyaṇiyum niṛattavan 

antarangamuḍan gōpi nānendṛāl avasarattāli kaṭṭum guṇattavan 

adiha manattavan edilumihuttavan naṭana padattavan naḷina mukhattavan

C

vēiyyukkum pēiyyukkum bhēdam teriyāda paḍi 

veṇṇaittārum enṛu kēṭṭa paiyyan – chinna 

piḷḷaittanam enṛu sholli veṇṇaittandāl tinṛu viṭṭu

peṇṇait tārum enṛu kēṭṭa paiyyan 

māyattanamum pazha valla viṇaiyum pōkki 

vandu kuzhaloodum tirukkaiyan 

vāzhndadu pōngāṇum nānē mayangi inda 

vārtaiyinai sholla vaitta kaṇṇaiyyan

MK

varinda shezhungkanaka maṇiyāḍai 

aṇinda neela niṛattavan 

padumarāha gōmēdaka marakata 

pavazha maṇiyaṇiyum niṛattavan 

antarangamuḍan gōpi nānendṛāl avasarattāli kaṭṭum guṇattavan 

adiha manattavan edilumihuttavan – naṭana padattavan naḷina mukhattavan

ஆரபி ஆதி

ஒரானொருவன் குழலூதும் திருடனிங்கு

நேராக வருகின்றான் உங்கள்

நெஞ்சமெல்லாம் கொள்ளைப் போகவோ

இரேழுலகமெலாம் அவனுக்கொரு பக்ஷணம்

உறக்கம் விட்டெழுந்திருமே இந்த க்ஷணம்

அப

நேராகத் தலைமேலே தோகையொன்று காட்டி

நெற்றிடை ஆடுகின்ற நீலமணிச் சூட்டி

வாராத கருங்கூந்தல் வந்தலையக் காட்டி இந்த

வழிநோக்கி வருகின்றான் பாதம் கொண்ட மட்டும் எட்டி

மகா

வரிந்த செழுங்கனக மணியாடை

அணிந்த நீல நிறத்தவன்

பதுமராக கோமேதக மரகத

பவழ மணியணியும் நிறத்தவன்

அந்தரங்கமுடன் கோபி நானென்றால்

அவசரத்தாலி கட்டும் குணத்தவன்

அதிக மனத்தவன் எதிலுமிகுத்தவன் நடனபதத்தவன் நளினமுகத்தவன்

வேயுக்கும் பேயுக்கும் பேதம் தெரியாதபடி

வெண்ணைத்தாரும் என்று கேட்ட பையன் - சின்ன

பிள்ளைத்தனம் என்று சொல்லி வெண்ணைத்தந்தால் தின்று விட்டுப்

பெண்ணைத்தாரும் என்று கேட்ட பையன்

மாயத்தனமும் பழ வல்ல வினையும் போக்கி

வந்து குழலூதும் திருக்கையன்

வாழ்ந்தது போங்காணும் நானே மயங்கி இந்த

வார்த்தையினை சொல்ல வைத்த கண்ணைய்யன்