Download Venkata Kavi app
Rādha kalyāṇam - Sheer pāttira varishaiyai varṇikkum keertanam |
pattarai māttuppashum ponnāl sheida pālkāicchum ēnam pānakkaraṇḍi |
pārttadum oru kaṇam nākku neer shoṭṭum pāyasam vaikkinṛa pāngāna uruḷai |
appamum adirasamum iḍuhinṛa kārai aval pori vaṛukkinṛa ahala vāi vāṇāi |
chippalum mooḍiyum chinna vāittōṇḍi siṛusāha adukkētta sem ponnin mooḍi |
āvaṇattavalai aṇḍā karaṇḍi jāraṇi pēlā tangattil mattu |
moovaṇippāngāna mookkudaittookku moiyyāda paḍikkāna mooḍiyām shalaḍai |
ulai neerkkalayamum kalayattu jōḍi ottadāi vazhamai udir vanda kāḍi |
kalaiyōviyam vaitta kanakattāmbāḷam kālvaitta kiṇṇam gati sheiyyum ēnam |
dōshai tiruppi turuval karaṇḍi nei kāicchum pakkā nēmattu ahappai |
sōmāsi vaṭṭa tōi vaḍikaṭṭi annattu vaṭṭil azhahāha neetti |
arukkanaṛchaṭṭi āzhattuvambai parukkaiyin pakkuvam pārkkum iḍukki |
paṭṭu pazhakkāyum pākkōḍu veṭṛilai kaṭṭuppaḍāmalē kanakattāmbāḷam |
mooḍittān vaicchālum mukkālum terihinṛa muttu navarattinamām mōna nahaippeṭṭi |
ettanai ettanai kuttu viḷakkōḍi eṇṇip pārkkum munnē pōhudu kooṭṭam |
ராதா கல்யாணம் - சீர் பாத்திர வரிசையை வர்ணிக்கும் கீர்த்தனம் |
பத்தரை மாத்துப் பசும் பொன்னால் செய்த பால்காய்ச்சும் ஏனம் பானக்கரண்டி |
பார்த்ததும் ஒரு கணம் நாக்கு நீர் சொட்டும் பாயஸம் வைக்கின்ற பாங்கான உருளை |
அப்பமும் அதிரஸமும் இடுகின்ற காரை அவல் பொரி வருக்கின்ற அகல வாய் வாணாய் |
சிப்பலும் மூடியும் சின்ன வாய்த் தோண்டி சிறுசாக அதுக்கேத்த செம் பொன்னின் மூடி |
ஆவணத்தவலை அண்டா கரண்டி ஜாரணி பேலா தங்கத்தில் மத்து |
மூவணிப் பாங்கான மூக்குடைத் தூக்கு மொய்யாத படிக்கான மூடியாம் சலடை |
உலை நீர்க் கலயமும் கலயத்து ஜோடி ஒத்ததாய் வழமை - உதிர் வந்த காடி |
கலையோவியம் வைத்த கனகத்தாம்பாளம் கால்வைத்த கிண்ணம் கதி செய்யும் ஏனம் |
தோசைத் திருப்பி துருவல் கரண்டி நெய் காய்ச்சும் பக்கா நேமத்து அகப்பை |
சோமாசி வட்ட தோய் வடிகட்டி அன்னத்து வட்டில் அழகாக நீத்தி |
அருக்கனற்சட்டி ஆழத்துவம்பை பருக்கையின் பக்குவம் பார்க்கும் இடுக்கி |
பட்டு பழக்காயும் பாக்கோடு வெற்றிலை கட்டுப் படாமலே கனகத் தாம்பாளம் |
மூடித்தான் வைச்சாலும் முக்காலும் தெரிகின்ற முத்து நவரத்தினமாம் மோன நகைப்பெட்டி |
எத்தனை எத்தனை குத்து விளக்கோடி எண்ணிப் பார்க்கும் முன்னே போகுது கூட்டம் |