Download Venkata Kavi app
Praṇavōpadēsham (Opera) |
1 | kālamum kaḍandu ninṛanādiyāna jyōtiyaṛku kaṇṇaruḷ tavattu vanda deivamām kandan indiran vaṇanga nandiyan taḍattilanga kanduhanda muntozhilhaḷ sheiyyumām |
2 | ānaiyanṛa aimukhattavānai aṇṇal shoozha mundi vānavillinai vaḷaittu pōḍumām vānavillinai vaḷaittu mōdi minnalai sharattuḷ ākkavum ilakku engu tēḍumām |
3 | āḍalambalattilangum tōḍahaṭṛi tooya neṭṛi āṛiraṇḍu tōḍu kēṭṭu vaiyyumām tōḍahaṭṛu māya viddai tooya narttanai tirutti tōraṇaiyum tānuṇartti sheiyyumām |
4 | vāri nāga māmadiyam vaittadai aṛindilādu vaṇṇamum enakku enṛu kattumām āṛiḍam aṇaittu konji aiyyanallavō enavum attanaiyum shonnavar vāi pottumām |
5 | kunjita padam shumanda kundayiṭṛanai azhaittu kooḍa endanai shumakku ennumām anjiyum kunippa vanda muntavap puṛattilangi anda mikka nanniruttam paṇṇumām |
6 | indiran irunda veḷḷaiyānaiyai ninakku enna nindaiyinai sheidu neengu ennumām endiram ivaiyumenṛu chintaiyum mayangu nēram en mudalvan nōha ovvēn ennumām |
7 | nāradan koṇarnda veeṇai nalladāyinaṭṛi koovi gnyānamē ilāda neevir ennumām tāramum shiṛakka meeṭṭi tantiyai taḷattuṇartti tanniyar kuṛittu gānam paṇṇumām |
8 | nandiyin shiṛanda nādamāna maddaḷam pirittu nādhr tāka tomka enṛaḍikkumām sundari gaṇangaḷ nāṇa tōvida gaṇangaḷāḍi tuiyyadāi aḍavuhaḷ piḍukkumām |
9 | āṛiraṇḍu enna enha aiyyan panniraṇḍu enha aiyyayyanṛiḷakkamāi shirikkumām māṛi māman aiyyanaiyum kaṇḍu panniṛaṇḍu enṛu val vazhakku sholliyum shirikkumām |
10 | āṛiraṇḍu moonṛu nāngu aiyyan meeḷak kooṛa anṛu attanaiyum kuṭṛamenṛazhaikkumām kooṛiyum iraṇḍu āru koḷḷavum kalandadenna kondaḷikkum mānadhi enṛokkumām |
11 | āṛiraṇḍu nāngu moonṛu aiyyan meeḷakkooṛa anṛu attanaiyum kuṭṛamenṛaḷaikkumām āṛiraṇḍumānavarhaḷ annaiyum en aiyyan mēni āna bhēdamum ahaṭṛi niṛkumām |
12 | dēvarum shiṛanda maṭṛa shenshiva gaṇangaḷ yāvum shentamizh maṇakka pāḍam sholludām yāvarum kaṇakku tandan vāyilē pazhakki niṛka yāzhinai pazhitta shollāl aḷḷudām |
13 | vāriyum talai muḍikka mādhavi azhaikkavum ammā unakku āṛu kaiyyum uḷḷadō kooṛiyum shirittalaittu konjiyambalattil sheida koottinai kavihaḷ sholla valladō |
14 | ittanai kaḍanda nēram nattu māmaṛai mukhattan attana padattavaikku mundavum tattaha shilambolikka sharavaṇattanāḍaleṭṛi mettavum tarukki munnaluṭṛanan |
15 | manda mā nahaiyoḷittu anda mā maṛai mukhattan chintaiyai uṇarndu veṭṛi kandanan nandi neer avan munnōkki enniḍam azhaittu vārum nandamāṇai enṛadaṭṭi ninṛanan |
16 | vēdanē munāḷa ninṛa nādanē umai azhaikka veṭṛi vēl muruhan āṇai enṛadum sheetaḷa paṇikkarangaḷ sheiyyavum vaṇangalaṭṛu shiṛuvanō enai azhaittan enṛanan |
17 | enṛavan aḍindu mundi angirukaṇanga nōkka kandanin aruhu vandu nēravum innavan varuhaiyāyum ēnenaṛkurāda kandan innaruḷ tanaiyuṇartti nōkkavum |
18 | vandavan tanaiyirutti vārumeerum enṛa kandan māmaṛai shirattai uṭṛu nōkkiyum shenshaḍai muḍitta vaṇṇa tiruvinōi varuha enṛu teḷḷiya tirukkai kāṭṭi ninṛanan |
19 | endanai azhaitta nōkkam ēdavai uṇarttavenna irumirum enattaḍuttu vēdavōi undaṇar shiranganālum uṭṛadum edaṛkkidenna ōruḷam perutta āshai mēdavum |
20 | idukolō ō kēḷidanṛi illaiyō perunkavaihaḷ ennilai aṛivadonṛi nērndadām iruhu sāma taittireeya mādaram enacchiṛanda eeriru maṛaihaḷ sholla vāittadām |
21 | mikkavum uḷam kanindem meedamonṛu nin peyarhaḷ vēlaiyum nilaihaḷāvum kooṛumē vēdanānmukhan piraman nāmahakkaṇavan taḷam virikkamalat tōnṛal endan nāmamē |
22 | ākkalenṛa tozhiluṇarndu attanai uyirhaḷ meeḷa aruḷuvēn aduvum endan sheihaiyām nākkuṇarnda kalvi yāvum gnyānamenṛa tanmaiyāvum nānilādiruttal enṛāl poiyyumām |
23 | pōdumenṛu aiyyan niṭṛi puṇṇiya idaṛkuḷ endan buddhiyil padiya onṛum illaiyē buddhiyil padiya enṛāl nattiya maṛaihaḷ anṛi poruḷum idenṛu kāṇbadillaiyē |
24 | talaihaḷē uyarndadenṛu tarukkināl umakku nānē tarattilē mihuttanenṛu āhumē kalaiyilē mihuttanenṛāl kalviyil aḍakkaminṛi kāṇavum tarukkanenṛu āhumē |
25 | mēduram mukham kanindu āduram mihap paṇindu māmaṛaikku moolamē kēḷ enṛadum ādaramiruhu sāma āgamenṛizhindu shonna attanaikkuḷ onṛu shollumenṛanan |
26 | nammuḍai shevihaḷāriraṇḍu minnum nāmaṛaihaḷ nalladāi maḍuttadillaiyādalin nammuḍai manantaṇindu nōṭṛadālivan maḍukka Ṡ nōṭṛadin tavam shiṛakkumādalin |
27 | ivanirundezhil maṛaikkuḷ edu kolō tahumidenṛu uvahaiyāl mudal virippadenṛadum tivimanār idaitterindu teḷivilā uḷam shiṛakka deivam munnam ōm uṇartti ninṛanan |
28 | ōm enum sholaikkaḍakku munnamē iṛaivan niṭṛu uttamā nahum noḍikkum enṛanan uḷḷavāradaiyuṇarndu koḷḷavumenakkumāha uraiyaruḷveer enṛu kooṛi ninṛanan |
29 | tiritarum manattan tannuṭchittamuḷḷum nool virittu dishai dishaikkumeṭṭu nōkki ninṛanan sheṛi tarum tirumukhattu muruhanāridai aṛindu shiritta vāridai taḍuttu ninṛanan |
30 | umadu nāshirattuḷonṛum uraiyanō terindirukka uṭṛadenna vāṭṭameedu enṛanan nama tarum viḍaiyai sholla nāṭṭamonṛu maṭṛadālō nānmukhatta shollumenṛadaṭṭinan |
31 | inṛu shenṛu nāḷaiyē uvandu vēdamun poruṭku iyandu sholvōm viṭṭaruḷha enṛadum iṛaivanum manaikkuḷinda ezhilurum vayattuḷenṛāl iṇaiyiḷitta kālamenṛuṛādavō |
32 | uvahaiyāi iṛangi inda uttamattu māmaṛaikkum uṛudiyāyinē uṇarndu shollumin navaiyurādu shol kaḍandeer nānumummai gnyānaminṛi nān mukhattavan ennilādumin |
33 | uraihavenṛu taṭṭi ninṛa muruhanam mukhattumanji onṛumē munādu ninṛa vēdanin shiramiraṇḍiraṇḍizhuttu teḷḷiyum kunittu ninṛu tirukkaramiruṭṭi kuṭṭi ninṛanan |
34 | amarār nahai maṛaikka aruhuḷār mukham maṛaikka azhahanār avai veruṭṭi sheeṛiyum aṛindavar irādu shella alladu nahaittadennin aḍutta māmuṛaikkumāhak kooṛiyum |
35 | pazhittadum poṛādu enṛu vizhittanattuḷam naḍukka pan muṛai adaṭṭi ninṛa pinnarum azhikkumāṛiyalai kooṭṭi aḍuttavarhaḷai viḷittu āzhvalan vilangu tārumennalum |
36 | vāngiyum karachirattu vannuṛa piṇaittu ninṛu māviruṭshiṛaikkuḷiṭṭu vindaiyāi tāngiyum maṇum viṇungaḷ tandirukkaram shiṛakka tanniyal tiruṭṭi toṭṭu ninṛanan |
37 | pēḍumā viyan perutta peeḍumākuṛam taḍutta kēḍahanṛa teeduḷ anji pōhavē kooḍumāraṛam paḍutta veeḍuḷār tanam perukki pāḍumāriyal aḍangi pōhavē |
38 | azhahuḷār ilāralār avai ivai adō idō en- ṛattanai ahaṭṛi ninṛu munnavum pizhai ilādaṛam viḷangi pēruhaḷ kaṇam shiṛandu pittarum uḷam kalandu pinnavum |
39 | geeta kinkiṇi shilambum pāda kankaṇa parambum vēdamāi viḷangalāha pāḍavum nādanār munankalanda nal poruḷhaḷāvumāha nān enum aham ahaṭṛi ōḍavum |
40 | ēmanār irukkaiyuḷḷum āmunam payakkumāha tōmarattu shoolamāvum shōvalum vāmanāriḍam viḷangu māmanait taṭankaḍanda mattahai viḷangumāna kēvalum |
41 | tānurāda tanmaiyum anādiyāna nanmaiyum munōḍiyāna ninṛadenṛa vāralum vānurāda tonmaiyum vazhakkilāda ponmaiyum maṇṇum viṇṇumāi puhazhndu kooṛalum |
42 | danti sundaram pozhinda tannaruḷ viḷangum aṇṇan tan karam terindeḍukka vāngiyum nandiyam pozhiluhandu nanṛena kanindu munnam nāthanō yavōyidenṛu neengiyum |
43 | karam munaindu paṭṭadō param taṇindu viṭṭadō puṛam payakkumāṛaṛindu viṭṭadō (alladu) varam kanindu ōr uruttaram shiṛanda tanmaiyākki naram puhazhndu tāniyaṭṛi viṭṭadō |
44 | tāḷaṇi shilambumāḍi tattiya gaṇangaḷāḍi shālavum shalār pilār enṛāḍudē āḷavan iṇaikku vaitta attanai ezhuttu mundi ālayam shilār uḷārenṛāḍudē |
45 | vandiyam kanindaṇainda kandanundu mundayam kalan- duḷam shiṛandadāha meiyyudē andiyam piṇainda vinda shentiramaṇaindu vanda avaniyam palantulanga meiyyudē |
46 | gnyānamum kalanda nalla mōnamum shiṛandu vanda dānamum muruha sannidhānamāi moona manda kāluḍai maṛandu vanda tollinam mu- ḷaitta vāṛirundu koṇḍa dānamāi |
47 | mei shivam tanattu manga mei poruḷhaḷāvum ōiyndu vindayāi puṛattirundu nōkkavum kaittalam kavarndu vanda kādalenna kandanukku shei tavam idenṛu vandu nōkkavum |
48 | aiyyanaṭṛiṛattumanji uyvanaṛkuṇarndu munni meiyanār tirukkazhaṛku mēttinan attanāhi moolanāi aṇaittu māyahattiniṛku muttanāya shatti vāman eṇṇavum |
49 | nandi kēḷuhanda nanda maindan inda chintai koṇḍa tanda sheihai yāvum eezhidennumin nammuḍai aḷaindu mānai kommena taḍangaleṭṛi nam munē ivvēdanai koṇarndarum |
50 | shiṛuvana sheyalhaḷenṛu chintanaikkuḷ eṇṇumenṛu sheidanō shinattam enṛu kooṛumin aṛumukhan tanōḍu anda karimukhan alādu anda tirumahaḷ dhanādanāyum āvaden |
51 | oru noḍi tanakkuḷāhum uṛuviyal shinattadāyum ulahamāvadenṛalum tiṛattumin |
52 | ennalum nandiyōḍi maṇimadan punaindu kooḍi ezhiluṛu talattu vandu ninṛanar munnalankaḷāvu meeṛi moi malar vizhikkanōkka annilai aṛindu ēdumaṭṛanar |
53 | dēva dēva nāthanām shiṛanda vēda moolanām anantamādi ānavan tan āṇaiyām shentiran tananda vēda tirumukhantanai viḍuttu teṭṭenap paḍuttiṛenṛiyaṭṛinan |
54 | ettiram enattiṛan iyāvareeduṇarttinar inē muniṛkavenṛadaṭṭiyum niṛuttiyum attiṛan mayangi pinnar uṭṛanar iyaindavāru ānavai iṇaṭṛi anjiyāhavum |
55 | yāvarē poruḷuṇartta vallirēl avarmuninṛu yāvumē iṇaihavenṛu kooṛinōm allavō idāṇaiyennil uḷḷavar tamōḍumuṭṛa kaḷḷavar tuṇaikkumāha niṛkavum |
56 | sheivandenna sheidi enna tikkenat tirumbi vandu shenshaḍaitta shōdi munnarākkinar |
57 | ōvadō iṇakkamenṛu ōḍi nandi nammunē uṭṛadōm maṇākkanām sanandanai koovinōm idenṛazhaittu kooḍavum enatturatta koṭṭinār murashu nandi koṭṛavan |
58 | tāvina sanakan nōkki shankaran muṛuvalittu taruṇamāi aruṭkaṇōkki kooṛinar |
59 | kandanin aruhu shenṛu kazhaṛutam poruḷuraittu kāvalaiyaṛutti ingu meeḷudum ennalum poruḷhalenṛāl edu kolō mudanmaiyanna ezhiluṛum praṇavam āhumenṛadum |
60 | vadanamum vidha vidhattu vāṭṭamum mayanga ninṛu vahai vahai karam kashakki dēvanē nidamurum praṇavamākkum nittiyattu shol tanakku neetiyāi poruḷhaḷāi aruḷhavō |
61 | poruḷinai aruḷvayāyin pukkanap puhundu meeṛi pōyinattu poiyinangaḷākkavō |
62 | umakkinum maḍuttadillai āyinen uzhanṛukoṇḍu ummiḍam tuṇindu shelha nandiyōi namakkivan iṇakkanenṛa nāraṇan tanaiyazhaittu nāḍumin ena shiṛakku munnamē |
63 | tumakkena tuyandadōṭṛa tozhuda kaiyaṇaindavāṛu tuḷabhamā kaḷattan munnamāyinan emakkenum uṇarndadillai immuṛai poṛukkavenna iṇai iṇai tulakkamenbaduḷḷadō |
64 | āyirattu nāvu koṇḍa aravanai azhaikkavenna ādishēḍanum munaindu vandanan neeyena padam vizhundu nenjinai tarantarattu neṭṭiyum karangaḷiṭṭu eṇṇiyum |
65 | ēdena poruḷhaḷenṛum enda vēdamoolamenṛum ezhitinukkishaiyum enṛum ettenṛum ōvadenṛum āvidenṛum onṛumē urādu kaihaḷ ottadāi virittumanji niṭṛanan |
66 | ittanai kaḍanda nēram iṛaivanār iṇangi ninṛu eṇṇi eṇṇi eṇṇinār idenṛiyum |
67 | shaḍai viritta chandiran diḍamaṇaittu konṛaiyum maḍalaḷittu gangaiyai taḍattinan paḍam viritta nāhamai diḍam piḍittu dēviyai iḍam aṇaittu sēnaiyai naḍattinan |
68 | shoolamum kapāla mālai ālamum viḷangu māpi- nākamum tolāḍaiyum naḍandanan |
69 | nandi mā madan anantan indiran sanandan vandi nāradan shukan viyādinādihaḷ dēvarambarar viyakka yakka kinnarar mayakka ēvalārhaḷ ādiyar toḍarndanar |
70 | kāttiyāyini kavardini kalādhari kalāngi neeli kāḷi māyi kālini kāla kālini bhavāni kāmini kuḍāri chaṇḍikā shivā nārāyiṇiyum kooḍavum |
71 | eṇḍishaiyiyakkarāḍa ezhishai muzhangi pāḍa ezhiluṛum talattu vandu ninṛanar koṇḍala muzhakku nāda kumaranam muṛaikkezhundu konjiyumaṇaindudāṭkunindanan |
72 | kandanum mukhattu nōkki kādalum kanindu ookki kāla kālanāridaik kazhanṛanar |
73 | poruḷuṇarnda vāruḷār punaivadenna kanda vanda poṛumaiyē maṇakkumenbadallavō aruḷilādu kaṭṛavar aṇaindu pōna tee oḷikku āhuvār uvamai enṛaṛivaiyō |
74 | ittaiyenṛu kuṭṭiyum piṇaittu ninṛu māshiṛaikkuḷ iḍuvadan tān kaṭṛavarukku nalladō viḍuha venṛiṛai maḍutta veṭṛi vēṛkumaran teḷḷi vidham vidham nahaittirundu sheeṛinan |
75 | aiyyanē poruḷuṇarndu āvadāyin neevirum āvadai maṛaittu sholvadāhumō āvadaiyiyaṭṛum anda arumaṛaikku māmudaṛshol appuṛam payakkum vaṇṇamākkudum |
76 | aiyyanē en arumukhattu aṇṇalē enakkuminnum āvadum aṛivadillai ennavum |
77 | nalladu aṛivadillaiyāyim umakku sholla nāniyandum āyinum idonṛumin mella nān guruvumāha viḷangi neer maṇākkanāha meivadenṛāl āhavenṛu kooṛinan |
78 | avvaṇa maṛangaḷanna amaikkavum aṇaihalenna attanai amaittum tāṇḍi ninṛanan evvanattu mēḍai vaittum eṭṭiḍā poruḷum āna iṛaivanōkki ēdenattuk kandanum |
79 | umadoruṭpuyankaḍāṛum onvadenna uṭṛiḍāda uttamattu mei shivam kunindadē uttamattu meishivam kunindadālulahelāmum uṭṛiḍāda karuṇaiyil nanaindadē |
80 | vēdamum poruḷumāha meiyyumōḍaṛangaḷāha miyyumōḍanantamāha ninṛadē geeta kinkiṇi padangaḷ kiṭṭina shivatta mēni kekkalikka mā varangaḷ enṛadē |
81 | onṛumāi iraṇḍumāi ilādumāyuḷḷadāi uḷḷumāi puṛangaḷāna shollinai uṇarvumāi koṇarvumāi puṇarvumāi taṇarvumāi uṛum poruḷhaḷāvumāya shollinai |
82 | avanarum poruḷhaḷāya āmuṛaikku māṭṛiyāna aruviyan poruḷhaḷētti ninṛanan āmuṛai aruḷi ninṛu aiyyanayum viḍutti ninṛu arumukhan uyarndu ninṛu āyinan |
83 | pōmuṛaikku poiyyumāi punai muṛaikku meiyyumāi puṇṇiyangaḷ ānadāi niṛaittanan |
ப்ரணவோபதேசம் |
1 | காலமும் கடந்து நின்றநாதியான ஜோதியற்கு கண்ணருள் தவத்து வந்த தெய்வமாம் கந்தனிந்திரன் வணங்க நந்தியன் தடத்திலங்க கந்துகந்த முந்தொழில்கள் செய்யுமாம் |
2 | ஆனையன்ற ஐமுகத்தவானை அண்ணல் சூழ முந்தி வானவில்லினை வளைத்து போடுமாம் வானவில்லினை வளைத்து மோதி மின்னலை சரத்துள் ஆக்கவும் இலக்கு எங்கு தேடுமாம் |
3 | ஆடலம்பலத்திலங்கும் தோடகற்றி தூய நெற்றி ஆறிரண்டு தோடு கேட்டு வைய்யுமாம் தோடகற்று மாய வித்தை தூய நர்த்தனை திருத்தி தோரணையும் தானுணர்த்தி செய்யுமாம் |
4 | வாரி நாக மா மதியம் வைத்ததை அறிந்திலாது வண்ணமும் எனக்கு என்று கத்துமாம் ஆறிடம் அணைத்துக் கொஞ்சி ஐயன்னல்லவோ எனவும் அத்தனையும் சொன்னவர் வாய் பொத்துமாம் |
5 | குஞ்சித பதம் சுமந்த குந்தயிற்றனை அழைத்து கூட எந்தனை சுமக்க என்னுமாம் அஞ்சியும் குனிப்ப வந்த முந்தவப் புறத்திலங்கி அந்த மிக்க நன்னிருத்தம் பண்ணுமாம் |
6 | இந்திரன் இருந்த வெள்ளை யானையை நினக்கு என்ன நிந்தையினை செய்து நீங்கு என்னுமாம் எந்திரம் இவையுமென்று சிந்தையும் மயங்கு நேரம் என் முதல்வன் நோக ஒவ்வேன் என்னுமாம் |
7 | நாரதன் கொணர்ந்த வீணை நல்லதாயினற்றி கூவி ஞானமே இலாத நீவிர் என்னுமாம் தாரமும் சிறக்க மீட்டி தந்தியை தளத்துணர்த்தி தன்னியர் குறித்து கானம் பண்ணுமாம் |
8 | நந்தியின் சிறந்த நாதமான மத்தளம் பிரித்து நாத்ரு தாக தொம்க என்றடிக்குமாம் சுந்தரி கணங்கள் நாண தோவித கணங்களாடி துய்யதாய் அடவுகள் பிடிக்குமாம் |
9 | ஆறிரண்டு என்ன என்க ஐயன் பன்னிரண்டு என்க ஐயய்யன்றிளக்கமாய் சிரிக்குமாம் மாறி மாமன் ஐயனையும் கண்டு பன்னிரண்டு என்று வல் வழக்குச் சொல்லியும் தரிக்குமாம் |
10 | ஆறிரண்டு மூன்று நான்கு ஐயன் மீளக் கூற அன்று அத்தனையும் குற்றமென்றளைக்குமாம் கூறியும் இரண்டு ஆறு கொள்ளவும் கலந்ததென்ன கொந்தளிக்கும் மா நதி என்றொக்குமாம் |
11 | ஆறிரண்டு நான்கு மூன்று ஐயன் மீளக் கூற அன்று அத்தனையும் குற்றமென்றளைக்குமாம் ஆறிரண்டுமானவர்கள் அன்னையும் என் ஐயன் மேனி ஆன பேதமும் அகற்றி நிற்குமாம் |
12 | தேவரும் சிறந்த மற்ற செஞ்சிவ கணங்கள் யாவும் செந்தமிழ் மணக்க பாடம் சொல்லுதாம் யாவரும் கணக்கு தந்தன் வாயிலே பழக்கி நிற்க யாழினைப் பழித்த சொல்லால் அள்ளுதாம் |
13 | வாரியும் தலை முடிக்க மாதவி அழைக்கவும் அம்- மா உனக்கு ஆறு கையும் உள்ளதோ கூறியும் சிரித்தலைத்து கொஞ்சியம்பலத்தில் செய்த கூத்தினை கவிகள் சொல்ல வல்லதோ |
14 | இத்தனை கடந்த் நேரம் நத்து மா மறை முகத்தன் அத்தனப் பதத்தவைக்கு முந்தவும் தத்தகச் சிலம்பொலிக்க சரவணத்தனாடலெற்றி மெத்தவும் தருக்கி முன்னலுற்றனன் |
15 | மந்த மா நகையொளிர்த்து அந்த மாமறை முகத்தன் சிந்தையை உணர்த்து வெற்றி கந்தனான் நந்தி நீர் அவன் முனோக்கி என்னிடம் அழைத்து வாரும் நந்தமாணை என்றதட்டி நின்றனன் |
16 | வேதனே முனாள நின்ற நாதனே உமை அழைக்க வெற்றி வேல் முருகன் ஆணை என்றதும் சீதளப் பணிக்கரங்கள் செய்யவும் வணங்கலற்று சிறுவனோ எனை அழைத்தன் என்றனன் |
17 | என்றவன் அடிந்து முந்தி அங்கிரு கணங்க நோக்க கந்தனின் அருகு வந்து நேரவும் இன்னவன் வருகயாயும் ஏனெனற்குராத கந்தன் இன்னருள் தனையுணர்த்தி நோக்கவும் |
18 | வந்தவன் தனையருத்தி வாருமீரும் என்ற கந்தன் மாமறை சிரத்தை உற்று நோக்கியும் செஞ்சடை முடித்த வண்ண திருவினோய் வருக என்று தெள்ளிய திருக்கை காட்டி நின்றனன் |
19 | எந்தனை அழைத்த நோக்கம் ஏதவை உணர்த்தவென்ன இருமிரும் எனத்தடுத்து வேதவோய் உந்தணர் சிரங்கனாலும் உற்றதும் எதற்கிதென்ன ஓருளம் பெருத்த ஆசை மேதவும் |
20 | இது கொலோ ஓ கேளிதன்றி இல்லையோ பெருங்கணங்கள் என்னிலை அறிவதொன்றி நேர்ந்ததாம் இருகு சாம தைத்திரீய மாதரம் எனச் சிறந்த ஈரிரு மறைகள் சொல்ல வாய்த்ததாம் |
21 | மிக்கவும் உளம் கனிந்தம் மீதமொன்று நின் பெயர்கள் வேலையும் நிலைகளாவும் கூறுமே வேத நான்முகன் பிரமன் நாமகக் கணவன் தளம் விரிக்கமலத் தோன்றல் எந்தன் நாமமே |
22 | ஆக்கலென்ற தொழிலுணர்ந்து அத்தனை உயிர்கள் மீள அருளுவேன் அதுவும் எந்தன் செய்கையாம் நாக்குணர்ந்த கல்வியாவும் ஞானமென்ற தன்மையாவும் நானிலாதிருத்தல் என்றால் பொய்யுமாம் |
23 | போதுமென்று அய்யன் நிற்றி புண்ணிய இதற்குள் எந்தன் புத்தியில் பதிய ஒன்றும் இல்லையே புத்தியில் பதிய என்றால் நத்திய மறைகள் அன்றி பொருளும் இதென்று காண்பதில்லையே |
24 | தலைகளே உயர்ந்ததென்று தருக்கினால் உமக்கு நானே தரத்திலே மிகுத்தனென்று ஆகுமே கலையிலே மிகுத்தனென்றால் கல்வியில் அடக்கமின்றி காணவும் தருக்கனென்று ஆகுமே |
25 | மேதுரம் முகம் கனிந்து ஆதுரம் மிகப் பணிந்து மாமறைக்கு மூலமே கேள் என்றதும் ஆதரமிருகு சாம ஆகமென்றிழிந்து சொன்ன அத்தனைக்குள் ஒன்று சொல்லுமென்றனன் |
26 | நம்முடை செவிகளாரிரண்டு மின்னும் நாமறைகள் நல்லதாய் மடுத்ததில்லையாதலின் நும்முடை மனந்தணிந்து நோற்றதாலிவன் மடுக்க நோற்றதின் தவம் சிறக்குமாதலின் |
27 | இவனிருந்தெழில் மறைக்குள் எது கொலோ தகுமிதென்று உவகையால் முதல் விரிப்பதென்றதும் திவிமினார் இதைத் தெரிந்து தெளிவிலா உளம் சிறக்க தெய்வம் முன்னம் ஓம் உணர்த்தி நின்றனன் |
28 | ஓம் எனும் சொலைக்கடக்கு முன்னமே இறைவன் நிற்று உத்தமா நகும் நொடிக்கும் என்றனன் உள்ளவாரதை உணர்ந்து கொள்ளவுமெனக்குமாக உரையருள்வீர் என்று கூறி நின்றனன் |
29 | திரிதரும் மனத்தன் தன்னுட்சித்தமுள்ளும் நூல் விரித்து திசை திசைக்குமெட்டு நோக்கி நின்றனன் செறி தரும் திரு முகத்து முருகனாரிதை அறிந்து சிரித்தவாரிதை தடுத்து நின்றனன் |
30 | உமது நாசிரத்துளொன்றும் உரையனோ தெரிந்திருக்க உற்றதென்ன வாட்டமீது என்றனன் நம தரும் விடையைச் சொல்ல நாட்டமொன்று மற்றதாலோ நான்முகத்த சொல்லுமென்றதட்டினன் |
31 | இன்று சென்று நாளையே உவந்து வேதமுன் பொருட்கு இயந்து சொல்வோம் விட்டருள்க என்றதும் இறைவனும் மனைக்குளிந்த எழிலுரும் வயத்துளென்றால் இணையிளித்த காலமென்றுறாதவோ |
32 | உவகையாய் இறங்கி இந்த உத்தமத்து மாமறைக்கும் உறுதியாயினே உணர்ந்து சொல்லுமின் நவையுராது சொல்கடந்தீர் நானுமும்மை ஞானமின்றி நான்முகத்தவன் என்னிலாதுமின் |
33 | உரைகவென்றதட்டி நின்ற முருகனம் முகத்துமஞ்சி ஒன்றுமே முனாது நின்ற வேதனின் சிரமிரண்டிரண்டிழுத்து தெள்ளியும் குனித்து நின்று திருக்கரமிருட்டி குட்டி நின்றனன் |
34 | அமரார் நகை மறைக்க அருகுளார் முகம் மறைக்க அழகனார் அவை வெருட்டி சீறியும் அறிந்தவர் இராது செல்ல அல்லது நகைத்ததென்னின் அடுத்த மாமுறைக்குமாகக் கூறியும் |
35 | பழித்ததும் பொறாது என்று விழித்தனத்துளம் நடுக்க பன்முறை அதட்டி நின்ற பின்னரும் அழிக்குமாறியலை கூட்டி அடுத்தவர்களை விளித்து ஆழ்வலன் விலங்கு தாருமென்னலும் |
36 | வாங்கியும் கரச்சிரத்து வன்னுற பிணைத்து நின்று மாவிருட்சிறைக்குளிட்டு விந்தையாய் தாங்கியும் மணும் விணுங்கள் தந்திருக்கரம் சிறக்க தன்னியல் திருட்டி தொட்டு நின்றனன் |
37 | பேடுமாவியன் பெருத்த பீடுமாகுறம் தடுத்த கேடகன்ற தீதுள் அஞ்சி போகவே கூடுமாரறம் படுத்த வீடுளார் தனம் பெருக்கி பாடுமாரியல் அடங்கி போகவே |
38 | அழகுளார் இலாரலார் அவை இவை அதோ இதோ என் றத்தனை அகற்றி நின்று முன்னவும் பிழை இலாதறம் விளங்கி பேருகள் கணம் சிறந்து பித்தரும் உளம் கலந்து பின்னவும் |
39 | கீத கிங்கிணி சிலம்பும் பாத கங்கண பரம்பும் வேதமாய் விளங்கலாக பாடவும் நாதனார் முனங்கலந்த நல் பொருள்களாவுமாக நான் எனும் அகம் அகற்றி ஓடவும் |
40 | ஏமனார் இருக்கையுள்ளும் ஆமுனம் பயக்குமாக தோமரத்துச் சூலமாவும் சோவலும் வாமனாரிடம் விளங்கு மாமணைத் தடங்கடந்த மத்தகை விளங்குமான கேவலும் |
41 | தானுராத தன்மையும் அனாதியான நன்மையும் முனோடியாக நின்றதென்ற வாரலும் வானுராத தொன்மையும் வழக்கிலாத பொன்மையும் மண்ணும் விண்ணுமாய் புகழ்ந்து கூறலும் |
42 | தந்தி சுந்தரம் பொழிந்த தன்னருள் விளங்கும் அண்ணன் தண்கரம் தெரிந்தெடுக்க வாங்கியும் நந்தியம் பொழிலுகந்து நன்றென கனிந்து முன்னை நாதனோ யவோயிதென்று நீங்கியும் |
43 | கரம் முனைந்து பட்டதோ பரம் தணிந்து விட்டதோ புறம் பயக்குமாறறிந்து விட்டதோ (அல்லது) வரம் கனிந்து ஓர் உருத்தரம் சிறந்த தன்மையாக்கி நரம் புகழ்ந்து தானியற்றி விட்டதோ |
44 | தாளணிச் சிலம்புமாடி தத்தியக் கணங்களாடு சாலவும் சலார் பிலார் என்றாடுதே ஆளவன் இணைக்கு வைத்த அத்தனை எழுத்து முந்தி ஆலயம் சிலார் உளாரென்றாடுதே |
45 | வந்தியம் கனிந்தணைந்த கந்தனுந்து முந்தயம் கல- ந்துளம் சிறந்ததாக மெய்யுதே அந்தியம் பிணைந்த விந்த செந்திரமணைந்து வந்த அவனியம் பலந்துலங்க மெய்யுதே |
46 | ஞானமும் கலாத நல்ல மோனமும் சிறந்து வந்த தானமும் முருக ஸன்னிதானமாய் மூன மந்த காலுடை மறந்து வந்த தொல்லினம் முளைத்த வாறிருந்து கொண்டதானமாய் |
47 | மெய் சிவம் தனத்து மங்க மெய் பொருள்களாவும் ஓய்ந்து விந்தையாய் புறத்திருந்து நோக்கவும் கைத்தலம் கவர்ந்து வந்த காதலென்ன கந்தனுக்கு செய் தவம் இதென்று வந்து நோக்கவும் |
48 | ஐயனற்றிறத்து மஞ்சி உய்வனற்குணர்ந்து முன்னி மெய்யனார் திருக்கழற்கு மேத்தினன் அத்தனாதி மூலனாய் அணைத்து மாயகத்தினிற்கு முத்தனாய சத்தி வாமன் எண்ணவும் |
49 | நந்தி கேளுகந்த் நந்த மைந்தன் இந்த சிந்தை கொண்ட தந்த செய்கை யாவும் ஈழிதென்னுமின் நம்முடை அளைந்து மாணை கொம்மென தடங்கலெற்றி நம் முனே இவ்வேதனை கொணர்ந்தரும் |
50 | சிறுவனச் செயல்களென்று சிந்தனைக்குள் எண்ணுமாறு செய்தனோ சினத்தம் என்று கூறுமின் அறுமுகன் தனோடு அந்த கரிமுகன் அலாது அந்த திருமகள் தனாதனாயும் ஆவதென் |
51 | ஓரு நொடி தனக்குளாகும் உறுதியில் சினத்ததாயும் உலகமாவதென்றலும் திறத்துமின் |
52 | என்னலும் நந்தயோடி மணி மதன் புனைந்து கூடி எழிலுறு தலத்து வந்து நின்றனர் முன்னலங்களாவு மீறி மொய் மலர் விழிக்கனோக்க அந்நிலை அறிந்து ஏதுமற்றனர் |
53 | தேவ தேவ நாதனாம் சிறந்த வெதமூலனாம் அனந்த மாதி ஆனவன் தன் ஆணையாம் செந்திரன் தனந்த வேத திருமுகந்தனை விடுத்து தெட்டெனப் படுத்திறென்றி யற்றினன் |
54 | எத்திரம் எனத்திறன் இயாவரீதுணர்தினர் இனேமுனிற்க வென்றதட்டியும் நிறுத்தியும் அத்திறன் மயங்கி பின்னர் உற்றனர் இயைந்தவாறு ஆனவை இணற்றி அஞ்சியாகவும் |
55 | யாவரே பொருளுணர்ந்த வல்லிரேல் அவர் முனின்று யாவுமே இணைகவென்று கூறினோம் அல்லவோ இதாணையென்னில் உள்ளவர் தமோடுமுற்ற கள்ளவர் துணைக்குமாக நிற்கவும் |
56 | செய்வமென்ன செய்தி என்ன திக்கென திரும்பி வந்து செஞ்சடைத்த சோதி முன்னராக்கினர் |
57 | ஓவதோ இணக்கமென்று ஓடி நந்தி நம்முனே உற்றதொம் மணாக்கனாம் ஸனந்த்னை கூவினோம் இதென்றழைத்து கூடவும் எனத்துரத்த கொட்டினார் முரசு நந்தி கொற்றவன் |
58 | தாவின சனகன் நோக்கி சங்கரன் முறுவலித்து தருணமாய் அருட்கணோக்கி கூறினர் |
59 | கந்தனின் அருகு சென்று கழறுதம் பொருளுரைத்து காவலையறுத்தி இங்கு மீளுதும் என்னலும் பொருள்களென்றால் எது கொலோ முதன்மையன்ன எழிலுறும் ப்ரணவம் ஆகுமென்றதும் |
60 | வதனமும் வித விதத்து வாட்டமும் மயங்க நின்று வகை வகை கரம் கசக்கி தேவனே நிதமுரும் ப்ரணவமாக்கும் நித்தியத்துச் சொல் தனக்கு நீதியாய் பொருள்களாய் அருள்கவோ |
61 | பொருளினை அருள்வயாயின் புக்கனப் புகுந்து மீறி போயினத்து பொய்யினங்களாக்கவோ |
62 | உமக்கினும் மடுத்ததில்லையாயினென் உழன்று கொண்டு உம்மிடம் துணிந்து செல்க நந்தியோய் நமக்கிவன் இணக்கனென்ற நாரணன் தனையழைத்து நாடுமின் எனச்சிறக்கு முன்னமே |
63 | துமக்கென துயந்த தோற்ற தொழுத கையணைந்தவாறு துளபமாகளத்தன் முன்னமாயினன் எமக்கெனும் உணர்ந்ததில்லை இம்முறை பொறுக்கவென்ன இணை இணை துலக்கமென்பதுள்ளதோ |
64 | ஆயிரத்து நாவு கொண்ட அரவனை அழைக்கவென்ன ஆதிசேடனும் முனைந்து வந்தனன் நீயெனப் பதம் விழுந்து நெஞ்சினை தரந்தரத்து நெட்டியும் கரங்களிட்டு எண்ணியும் |
65 | ஏதென பொருள்களென்றும் எந்த வேதமூலமென்றும் எழித்தினுக்கிசையும் என்றும் எத்தெனும் ஓவதென்றும் ஆவிதென்றும் ஒன்றுமே உராது கைகள் ஒத்ததாய் விரித்துமஞ்சி நிற்றனன் |
66 | இத்தனை கடந்த நேரம் இறைவனார் இணங்கி நின்று எண்ணி எண்ணி எண்ணினார் இதன்றியும் |
67 | சடை விரித்த சந்திரன் திடமணைத்து கொன்றையும் மடலளித்து கங்கையை தடத்தினன் படம் விரித்த நாகமை திடம் பிடித்து தேவியை இடம் அணைத்து சேனையை நடத்தினன் |
68 | சூலமும் கபால மாலை ஆலமும் விளங்கு மா பினாகமும் தொலாடையும் நடந்தனன் |
69 | நந்தி மா மதன் அனந்தன் இந்திரன் ஸனந்தன் வந்தி நாரதன் சுகன் வியாதினாதிகள் தேவரம்பரர் வியக்க யக்க கின்னரர் மயக்க ஏவலார்கள் ஆதியர் தொடர்ந்த்னர் |
70 | காத்தியாயினி கவர்தினி கலாதரீ கலாங்கி நீலி காளி மாயி காலினீ கால காலினி பவானி காமினி குடாரி சண்டி- கா சிவா நாராயிணியும் கூடவும் |
71 | எண்டிசையியக்கராட ஏழிசை முழங்கி பாட எழிலுறும் தலத்து வந்து நின்றனர் கொண்டல முழக்கு நாத குமரனம் முறைகெழுந்து கொஞ்சியுமணைந்து தாட்குனிந்தனன் |
72 | கந்தனம் முகத்து நோக்கி காதலும் கனிந்து ஊக்கி கால காலனாரிதைக் கழன்றனர் |
73 | பொருளுணர்ந்த வாருளார் புனைவதென்ன கந்த வந்த பொறுமையே மணக்குமென்பதல்லவோ அருளிலாது கற்றவர் அணைந்து போன தீ ஒளிக்கு ஆகுவார் உவமை என்றறிவையோ |
74 | இத்தையென்று குட்டியும் பிணைத்து நின்று மா சிறைக்குள் இடுவதன் தான் கற்றவைக்கு நல்லதோ விடுகவென்றிதை மடுத்த வெற்றி வேற்குமரன் தெள்ளி விதம் விதம் நகைத்திருந்து சீறினன் |
75 | ஐயனே பொருளுணர்ந்து ஆவதாயின் நீவிரும் ஆவதை மறைத்து சொல்வதாகுமோ ஆவதையியற்றும் அந்த அருமறைக்கு மாமுதற்சொல் அப்புறம் பயக்கும் வண்ணமாக்குதும் |
76 | ஐயனே என் அறுமுகத்து அண்ணலே எனக்குமின்னும் ஆவதும் அறிவதில்லை என்னவும் |
77 | நல்லது அறிவதில்லையாயிம் உமக்கு சொல்ல நானியந்தும் ஆயினும் இதொன்றுமின் மெல்ல நான் குருவுமாக விளங்கி நீர் மணாக்கனாக மெய்வதென்றால் ஆகவென்று கூறினன் |
78 | அவ்வண மறங்களன்ன அமைக்கவும் அணைகளென்ன அத்தனை அமைத்தும் தாண்டி நின்றனன் எவ்வனத்து மேடை வைத்தும் எட்டிடா பொருளும் ஆன இறைவனோக்கி ஏதெனத்துக் கந்தனும் |
79 | உமதொருட்புயங்கடாறும் ஒன்வதென்ன உற்றிடாத உத்தமத்து மெய்ச் சிவம் குனிந்ததே உத்தமத்து மெய்ச்சிவம் குனிந்ததாலுலகெலாமும் உற்றிடாத கருணையில் நனைந்ததே |
80 | வேதமும் பொருளுமாக மெய்யுமோடறங்களாக மிய்யுமோடனந்தமாக நின்றதே கீத கிங்கிணி பதங்கள் கிட்டின சிவத்த மேனி கெக்கெலிக்க மா வறங்கள் என்றதே |
81 | ஒன்றுமாய் இரண்டுமாய் இலாதுமாயுள்ளதாய் உள்ளுமாய் புறங்களான சொல்லினை உணர்வுமாய் கொணர்வுமாய் புணர்வுமாய் தணர்வுமாய் உறும் பொருள்களாவுமாய சொல்லினை |
82 | அவனரும் பொருள்களாய ஆமுறைக்கு மாற்றியான அருவியன் பொருள்களேத்தி நின்றனன் ஆமுறை அருளி நின்று அயனையும் விடுத்தி நின்று அறுமுகன் உயர்ந்து நின்று ஆயினன் |
83 | போமுறைக்கு பொய்யுமாய் புனை முறைக்கு மெய்யுமாய் புண்ணியங்கள் ஆனதாய் நிறைத்தனன் |