Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / sāmam mudal vēdangaḷai (Radha Kalyanam)

Index of Compositions

sāmam mudal vēdangaḷai (Radha Kalyanam)

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Navarōj Radha Kalyanam Khaṇḍa chāpu

1.

sāmam mudal vēdangaḷai shangiliyāik kaṭṭi

takkadena paṇmalarai sharam sharamāikkaṭṭi

ōm enum praṇavattinai oonjalāha vaittu 

uttamanukkuttamanār āḍirooshal lāli 

2.

shāyakkoṇḍai mēlē tōhai taḷataḷa venṛolikka

taraḷa muttu mālaihaḷum sharam sharamāi oḷikka

nēyamōḍum bhaktarhaḷum ninaippadellām phalikka

neelamalar kaṇṇan ingē āḍiyooshal lāli 

3.

aṇṇāndu kaṇṇan mukha azhahinaiyum kāṇa

ānālum āshaiyellām antarangam nāṇa

taṇṇārnda vaḷai nizhalil talaivan mukham kāṇa

tandirangaḷ rādhai sheidāḷ āḍirooshal lāli

4.

piḷḷai indappiḷḷaitanai peṭṛōmenṛu kaḷikka - anda

perumaiyil yashōdayinnum oru shuṭṛu perukka

kaḷḷattanamāi peṇhaḷ kaṇṇanai kaṇḍiḷikka

karuṇālavālan ivan āḍirooshal lāli 

5.

kanṛinaiyum kaṛavaihaḷum kāttaruḷum sheelan

kāḷinga narttamiḍum kāruṇālavālan

ninṛu tudipāḍuvar nenjattuṛai neelan

neela mayil tōhaimuḍi rājagōpālan lāli 

6.

oru piḍiyil avalukkenṛu uḷḷantanai koḍuttān

ōyāmal tooṭṛum shishupālanuyir keḍuttān

arava muḍimēlē ninṛu abhinayangaḷ piḍittān ippō

arangamā naharil vandu kālai neeṭṭi paḍuttān 

7.

pollāda kanjanukku maruhanena vandān

pootanai shei vanjanaikku puṇṇiyavāi tandān

kallāda shakaṭanukku kazhaliṇaihaḷ tandān ippō

gatiyillā engaḷukku nidhiyenavē vandān 

நவரோஜ் ராதா கல்யாணம் கண்ட சாபு

1.

ஸாமமுதல் வேதங்களைச் சங்கிலியாய்க் கட்டி

தக்கதென பண்மலரை சரம் சரமாய்க் கட்டி

ஓம் என்னும் ப்ரணவத்தினை ஊஞ்சலாக வைத்து

உத்தமனுக்குத்தமனார் ஆடிரூசல் லாலி

2.

சாயக்கொண்டை மேலே தோகை தளதளவென்றொலிக்க

தரள முத்து மாலைகளும் சரம் சரமாய்க் ஓளிக்க

நேயமொடும் பக்தர்களும் நினைப்பதெல்லாம் பலிக்க

நீலமலர்க் கண்ணன் இங்கே ஆடியூசல் லாலி 

3.

அண்ணாந்து கண்ணன் முக அழகினையும் காண

ஆனாலும் ஆசையெல்லாம் அந்தரங்கம் நாண

தண்ணார்ந்த வளை நிழலில் தலைவன் முகம் காண

தந்திரங்கள் ராதை செய்தாள் ஆடிரூசல் லாலி

4. 

பிள்ளை இந்தப் பிள்ளைதனை பெற்றோமென்று அந்தப்

பெருமையில் யசோதையின்னும் ஒரு சுற்றுப் பெருக்க

கள்ளத்தனமாய்ப் பெண்கள் கண்ணனைக் கண்டிளிக்க

கருணால வாலனிவன் ஆடிரூசல் லாலி

5.

கன்றினையும் கறவைகளும் காத்தருளும் சீலன்

காளிங்க நர்த்தமிடும் கருணாலவாலன்

நின்று துதிபாடுபவர் நெஞ்சத்துறை நீலன்

நீலமயில் தோகைமுடி ராஜகோபாலன் லாலி

6.

ஓரு பிடியில் அவலுக்கென்று உள்ளந்தனை கொடுத்தான்

ஓயாமல் தூற்றும் சிசுபாலனுயிர் கெடுத்தான்

அரவ முடிமேலே நின்று அபினயங்கள் பிடித்தான் இப்போ

அரங்கமா நகரில் வந்து காலை நீட்டிப் படுத்தான்

7.

பொல்லாத கஞ்சனுக்கு மருகனென வந்தான்

பூதனை செய் வஞ்சனுக்கு  புண்ணியவாய் தந்தான்

கல்லாத சகடனுக்கு கழலிணைகள் தந்தான் இப்போ

கதியில்லா எங்களுக்கு நிதியெனவே வந்தான்