Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / shree gōvinda nāma

Index of Compositions

shree gōvinda nāma

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Rāgamālika Ādi

P

shree gōvinda nāma sankeertanam

shreemad bhāgavatam sheivadōr adbhutam tāraka nāmapadam

dāmōdara nāma padanjana ranjana

AP

āgākkamsan aṛiyādē arunchiṛaiyil avatāramānadē

ānaka dundubhikkum dēvakikkum āṛu kaḍandiḍa onṛum māṛa

āyarpāḍiyil nandayashōdaikkum āṛu kaḍandiḍa onṛrum māṛa

pēyena vandiḍa pootanaikkumoru pizhai tirutti pērinbam āha

pinju padattinai konjiyudaittiḍa poḍipaḍu chakaṭāsuran teera

C1

 (Reetigowḷa)

madhurap pullānkuzhal oodi mangaiyar

manankavarndānāha āhi 

tudi paḍu navaneeta chōranum āhi kōḷ

shol vandavarhaḷai vella ninṛavanāhi 

MK

taṛipaḍu kayiṛadan kaṭṭunḍirunda taru muṛittu dāmōdaranānadu

tāvi kudittoru maḍuvil kāḷingan talai midittu tāṇḍavam āḍiyadu 

maṛiyoḍu shiṛuvarai oḷittavaccheyal malarayanum manamayanga ninṛadu 

malai eḍuttu kuḍai piḍittu gōkulam mazhai taḍuttu tānāgamamānadu 

C2

(Ārabhi)

bhuvanamuyya rāsaleelaihaḷ āḍi pongum uvahai iḍai oḷi tānāhi 

yuvatihaḷ gōpikā geetamum pāḍi yōgēshavaran darishanam tandu āhi 

avadiyuṛu kanjan āṇai koṇḍa akrooranukkāha tarum tavamānadu 

azhahiya madurai kooni nimirndiḍa azhahum tandadu aruḷum tandadu 

navavana mālaihaḷ shaṭṛiya sudhāman naṛgati peṛavum poṛpadameendadu

naḍunkavandiḍu kuvalayāpeeṭha nāshakāla yānai pōkki ninṛadu 

C3

(Aṭhāṇa)

mallar iruvaraiyum porudiazhittadu 

māmāya kamsanai māyavum teerttadu 

valvilankaṛa annai tandaiyai meeṭṭadu 

vānōḍum puhazh pāḍa tānāha ēṭṛadu

ellai irunkaḍal shoozha dvārakaiyai 

ezhiluṛa amaittadu kolu arashēṭṛadu 

ēntizhaiyār anda rukmiṇi dēviyin

eṇṇamaṛinda toodinai kēṭṭadu 

tollai tarum shishupālan ayarndiḍa

suyamvara manṭapam ayarndiḍa vēṭṭadu 

sogusuḍan rukmiṇi kaikoṇḍiḍa

tumburu nāradar sangeetam kēṭṭadu 

C4

(Maṇirangu)

ugrasēna mahārājan vasudēvan 

uddhavan akrooran balarāman kooḍa dharma

putranum tambihalōḍē upacharikka

bhoosurarhaḷ akṣhataiyum pōḍa

agragaṇya bheeshmarōḍu drōṇarum

āshihaḷ kooṛa dēva mangaiyar āḍa

amararoḍu gandharuvarum munihaḷum

āyarpāḍiyin iḍaiyarhaḷōḍē

takdadāna uṛavinil perum uṛavu

sambandi uṛavenak kaṇḍu koṇḍāḍa

tāliyum puḍavaik kooraiyum kaikkoṇḍu 

tattuvamuni gargarum koṇḍāḍa

C5

(Suraṭi)

tāzhādiru vēda nādangaḷ olikka

taruṇiyarhaḷ mangaḷamum pāḍa

talaimēlē pooraṇa kumbhangaḷ tookki 

tattuva munivarhaḷ gaddiyam pāḍa

vāzhai kamuhina tōraṇa vāshaloḍum

mādhavan tirumaṇa maṇṭapam nāḍa

mādhava yōgihaḷ pallāṇḍu pāḍa

māppiḷḷai peṇṇoḍu oonjalumāḍa

MK

keezh ēzhoḍu mēlēzhu bhuvangaḷum kiḍaitta tavamena naḍakkalānadu 

geṭṭi mēḷangaḷ koṭṭi muzhakkiḍa krṣhṇa rukmiṇi vivāhamānadu 

mazhai muhil ena varṇankoṇḍa hari mādhava mōhana geetamidānadu 

vākkinil venkaṭa kaviyum maṇandadu mangaḷagāna paramparaiyānadu 

ராகமாலிகா ஆதி

ஸ்ரீ கோவிந்த நாம ஸங்கீர்த்தனம்

ஸ்ரீ மத் பாகவதம் செய்வதோர் அத்புதம் தாரக நாம பதம்  

தாமோதர நாம பதஞ்சன ரஞ்சன

அப

ஆகாக் கம்ஸன் அறியாதே அருஞ்சிறையில் அவதாரமானதே

ஆனக துந்துபிக்கும் தேவகிக்கும் ஆறு கடந்திட ஒன்றும் மாற

ஆயர் பாடியில் நந்தயசோதைக்கும் ஆறு கடந்திட ஒன்றும் மாற

பேயென வந்திடு பூதனைக்குமொரு பிழை திருத்தி பேரின்பம் ஆக

பிஞ்சு பதத்தினை கொஞ்சியுதைத்திட பொடிபடு சகடாசுரன் தீர

ச 1

(ரீதிகொளள)

மதுரப்புல்லாங்குழல் ஊதி மங்கையர்

மனங்கவர்ந்தவனாக ஆகி 

துதிபடு நவனீத சோரனும் ஆகி கோள்

சொல்லவந்தவர்களை வெல்ல நின்றவனாகி

மக

தறிபடு கயிறதன் கட்டுண்டிருந்த தரு முறித்து தாமோதரமானது

தாவி குதித்தொரு மடுவில் காளிங்கன் தலைமிதித்து தாண்டவம் ஆடியது

மறியொடு சிறுவரை ஒளித்த வச்செயல் மலரயனும் மனமயங்க நின்றது

மலை எடுத்து குடை பிடித்து கோகுலம் மழை தடுத்து தானாகமமானது 

ச2

(ஆரபி)

புவனமுய்ய ராஸலீலைகள் ஆடி பொங்குமுவகை இடை ஒளிந்தானாகி

யுவதிகள் கோபிகா கீதமும் பாடி யோகேச்வரன் தரிசனம் தந்து ஆகி

அவதியுறு கஞ்சன் ஆணை கொண்ட அக்ரூரனுக்காக தரும் தவமானது

அழகிய மதுரைக் கூனி நிமிர்ந்திட அழகும் தந்தது அருளும் தந்தது

நவவன மாலைகள் சாற்றிய சுதாமன் நற்கதி பெறவும் பொற்பதமீந்தது

நடுங்கவந்திடு குவலயாபீகட நாசகால யானை போக்கி நின்றது 

ச3

(அடாணா)

மல்லர் இருவரையும் பொருதியழித்தது

மாமாயக் கம்ஸனை மாயவும் தீர்த்தது

வல்விலங்கற அன்னைத் தந்தையை மீட்டது

வானோடும் புகழ் பாட தானாக ஏற்றது

எல்லையிருங்கடல் சூழ துவாரகையை

எழிலுற அமைத்து கொலு அரசேற்றது

ஏந்திழையார் அந்த ருக்மிணி தேவியின்

எண்ணமறிந்த தூதினைக் கேட்டது

தொல்லை தரும் சிசுபாலன் அயர்ந்திட

சுயம்வர மண்டபம் அயர்ந்திட வேட்டது

சொகுஸுடன் ருக்மிணி கைகொண்டிட

தும்புரு நாரதர் ஸங்கீதம் கேட்டது 

ச4

(மணிரங்கு)

உக்ரஸேன மஹாராஜன் வஸுதேவன்

உத்தவன் அக்ரூரன் பலராமன் கூட தர்ம

புத்ரனும் தம்பிகளோடே உபசரிக்க

பூஸுரர்கள் அக்ஷதையும் போட

அக்ரகண்ய பீஷ்மரோடு த்ரோணரும்

ஆசிகள் கூற தேவமங்கையர் ஆட

அமரரோடு கந்தருவரும் முனிகளும்

ஆயர் பாடியின் இடையர்களோடே

தக்ததான ஸம்பந்தி உறவெனக் கண்டு கொண்டாட

தாலியும் புடவைக் கூரையும் கைக்கொண்டு

தத்துவமுனி கர்க்கரும் கொண்டாட

ச5

(சுரட்டி)

தாழாதிரு வேத நாதங்கள் ஒலிக்க

தருணியர்கள் மங்களமும் பாட

தலைமேலே பூரண கும்பங்கள் தூக்கி

தத்துவ முனிவர்கள் கத்தியம் பாட

வாழை கமுகின தோரண வாசலோடும்

மாதவன் திருமண மண்டபம் நாட

மாதவ யோகிகள் பல்லாண்டு பாட

மாப்பிள்ளை பெண்ணொடு ஊஞ்சலுமாட

மக

கீழ் ஏழொடு மேலேழு புவனங்களும் கிடைத்த தவமென நடக்கலானது

கெட்டி மேளங்கள் கொட்டி முழக்கிட க்ருஶ்ண ருக்மிணி விவாகமதானது

மழை முகில் என வர்ணங்கொண்ட ஹரி மாதவ மோஹன கீதமானது

வாக்கினில் வேங்கட கவியும் மணந்தது மங்கள கான பரம்பரையானது