Download Venkata Kavi app
Malayamārutam | Ādi |
P | tēḍikkāṇḍēnē manam tēḍikkaṇḍēnē |
MK | tēniṛaiyumāmalarānadu pōlum tiruvaruḷāna sadgurumalaraḍiyai |
AP | tēḍikkaṇḍēnē pāḍikkaṇḍēnē shelvattuḷ shelvam enṛu kaṇḍu koṇḍēnē |
MK | neeḍiya mātavam kooḍinadu pōlē nēriṇaiyilāda gurumalaraḍiyinai |
C | gānamenṛum nādamenṛum gati enṛum vidhi enṛum kādārakkēṭṭu kēṭṭalaindēnē edaiyō kādārakkēṭṭu kēṭṭalaindēnē gnyānam enin innadenṛaṛiyādu veeṇāha nānenṛum pēi piḍittalaindēnē |
MK | vānamum bhuviyum eeraḍi aḷanda mādhavan ivanenṛarindēnē madimukhamānadu manamoḍu vandena maṭṛeduvum aṭṛānēnē dānamum tavamum ōriḍam vandē tanakkenṛu vandu kaṇḍēnē dayaikkaḍalāna taḷiriḷamāna puhaliḍamāna poṛpadamānadai |
மலயமாருதம் | ஆதி |
ப | தேடிக்கண்டேனே மனம் தேடிக்கண்டேனே |
மக | தேனிறையுமாமலரானது போலும் திருவருளான ஸத்குருமலரடியைத் |
அப | தேடிக்கண்டேனே பாடிக்கண்டேனே செல்வத்துள் செல்வம் என்று கண்டு கொண்டேனே |
மக | நீடிய மாதவம் கூடினது போலே நேரிணையிலாத குருமலரடியினைத் |
ச | கானமென்றும் நாதமென்றும் கதி என்றும் விதி என்றும் காதாரக் கேட்டு கேட்டலைந்தேனே எதையோ காதாரக் கேட்டு கேட்டலைந்தேனே ஞானம் எனின் இன்னதென்றறியாது வீணாக நானென்றும் பேய் பிடித்தலைந்தேனே |
மக | வானமும் புவியிம் ஈரடி அளந்த மாதவன் இவனென்றறிந்தேனே மதிமுகமானது மனமொடு வந்தென மற்றெதுவும் அற்றானேனே தானமும் தவமும் ஓரிடம் வந்தே தனக்கென்று வந்து கண்டேனே தயைக்கடலான தளிரிளமான புகலிடமான பொற்பதமானதைத் |