Download Venkata Kavi app
| Tōḍi | Ādi |
| P |
vandavarai vārum enṛazhaittu maṇipōlum mozhiyāḍi nahaiyāḍinān anda manamōḍu uṛavāha maṛaiyāḍinān chinnakkuzhaloodinān |
| AP |
sondamanai uḍal poruḷ āvi inda tooyavan aḍi enṛu mēvi mundumoru nadikkaḍalinaittāvi vandu mōdudalō ena āduramēliḍa mukundā enakkoovi |
| C1 |
kai vaḷaihaḷ tāḷamiṭṭu kulunga iru kālaṇihaḷ eeḍu sheiyyattayanga mai varainda kaṇ imaihaḷ tulanga māṛudalāna ponnābharaṇangaḷum māladuvāna nilaiyinilanga |
| C2 |
indavidam shollikkoṇḍē pōhalām innum ettanaiyō piṛavihaḷ āhalām nandan mahizh maindan aruhāhalām nādakkuzhalishai ooda kanivoḍu kādaṛkaḍaliḍai āḍalām enṛu |
| தோடி | ஆதி |
| ப |
வந்தவரை வாரும் என்றழைத்து மணிபோலும் மொழியாடி நகையாடினான் அந்த மனமோடு உறவாக மறையாடினான் சின்னக் குழலூதினான் |
| அப |
சொந்தமனை யுடல் பொருள் ஆவி இந்த தூயவன் அடியென்று மேவி முந்துமொரு நதிக்கடலினைத்தாவி வந்து மோதுதலோயென ஆதுர மேலிட முகுந்தாயெனக்கூவி |
| ச1 |
கைவளைகள் தாளமிட்டுக் குலுங்க இரு காலணிகள் ஈடுசெய்யத் தயங்க மைவரைந்த கண்ணிமைகள் துலங்க மாறுதலான பொன்னாபரணங்களும் மாலதுவான நிலையினிலங்க |
| ச 2 |
இந்தவிதம் சொல்லிக் கொண்டே போகலாம் இன்னும் எத்தனையோ பிறவிகள் ஆகலாம் நந்தன் மகிழ் மைந்தன் அருகாகலாம் நாதக் குழலிசை ஊதக் கனிவொடு காதற் கடலிடையாடலாமென்று |