Download Venkata Kavi app
Jhunjhooṭi | Chatrurashra Ēka |
1 | viṣhamakkāra kaṇṇan pollāda viṣhamakkāra kaṇṇan vēḍikkaiyāi pāṭṭu pāḍi vidham vidhamāi āṭṭamāḍi nāzhikkoru leelai sheiyyum nanda gōpāla krṣhṇan |
2 | neela mēgham pōlē iruppān pāḍinālō nenjil vandu kuḍiyiruppān kōlappullānkuzhal oodi gōpihaḷai kaḷḷam ādi konjampōra veṇṇai tāḍi enṛu kēṭṭu āṭṭamāḍum |
3 | pakkattu veeṭṭuppeṇṇai azhaippān mukhāri rāgam pāḍaccholli vambukkizhuppān enakkadu teriyādenṛāl nekkuruha kiḷḷi viṭṭu (avaḷ) vikki vikki azhum pōdu idāṇḍi mukhāri enbān |
4 | kōlaikkoṇḍu shālai tuḷaippān adilē koṭṭum tayir aḷḷikkuḍippān shōlaikkuḷḷē tōzharazaippān avarhaḷukku toṭṭu toṭṭu sholli koḍuppān vegu sundaramāi māmi oruvaḷ yashōdai veeḍu sondamum koṇḍāḍi varuvāḷ tōrāyamāi anda māmi tookkikkoṇḍāl angavaḷai toḍāda iḍangaḷellām toṭṭu tolaippān |
5 | veṇṇai pānai mooḍakkooḍādu ivan vandu vizhunginālum kēṭkakkooḍādu ivan ammā kiṭṭē shollakkooḍādu sholliviṭṭāl attahāsam tānga oṇṇādu shummā oru pēcchukkānum tiruḍanenṛu sholli viṭṭāl un ammā pāṭṭi attai tāttā attanaiyum tiruḍarenbān |
ஜுஞ்ஜூட்டி | சதுரச்ர ஏக |
ப | விஷமக்கார கண்ணன் பொல்லாத விஶமக்கார கண்ணன் வேடிக்கையாய் பாட்டுப்பாடி விதம் விதமாய் ஆட்டமாடி நாழிக்கொரு லீலை செய்யும் நந்த கோபால க்ருஶ்ணன் |
ச1 | நீல மேகம் போலே இருப்பன் பாடினாலோ நெஞ்சில் வந்து குடியிருப்பான் கோலப் புல்லாங்குழலூதி கோபிகளை கள்ளம் ஆடி கொஞ்சம் போர வெண்ணைதாடி என்று கேட்டு ஆட்டமாடும் |
ச2 | பக்கத்து வீட்டுப் பெண்ணை அழைப்பான் முகாரி ராகம் பாடச்சொல்லி வம்புக்கிழுப்பான் எனக்கது தெரியாதென்றால் நெக்குருக கிள்ளிவிட்டு (அவள்) விக்கி விக்கி அழும்போது இதாண்டி முகாரி என்பான் |
ச3 | கோலைக் கொண்டு சாலை துளைப்பான் - அதிலே கொட்டும் தயிர் அள்ளிக் குடிப்பான் சோலைக்குள்ளே தோழரழைப்பான் அவர்களுக்கு தொட்டு தொட்டு சொல்லிக் கொடுப்பான் வெகு சுந்தரமாய் மாமி ஒருவள் யசோதை வீடு சொந்தமும் கொண்டாடி வருவாள் தோராயமாய் அந்த மாமி தூக்கிக் கொண்டால் அங்கவளை தொடாத இடங்களெல்லாம் தொட்டு தொலைப்பான் |
ச4 | வெண்ணைப்பானை முடக்கூடாது இவன் வந்து விழுங்கினாலும் கேட்கக்கூடாது இவன் அம்மாகிட்டே சொல்லக் கூடாது சொல்லிவிட்டால் அட்டஹாஸம் தாங்க ஒண்ணாது சும்மா ஒரு பேச்சுக்கானும் திருடனென்று சொல்லிவிட்டால் உன் அம்மா பாட்டி அத்தை தாத்தா அத்தனையும் திருடரென்பான் |